MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 10 வருஷமா ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கூட கிடைக்கல; சூர்யாவை துரத்தும் தோல்வி! காரணம் என்ன?

10 வருஷமா ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கூட கிடைக்கல; சூர்யாவை துரத்தும் தோல்வி! காரணம் என்ன?

Suriya Flop Movies : கங்குவா படமும் தோல்வி முகத்தில் உள்ளதால் நடிகர் சூர்யாவின் வெற்றிக்கான காத்திருப்பு நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு ஒரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படம் கூட கிடைக்கவில்லை.

2 Min read
Author : Ganesh A
| Updated : Nov 15 2024, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Suriya

Suriya

கோலிவுட்டில் நடிப்பின் நாயகனாக கொண்டாடப்படுபவர் சூர்யா. இவரின் சினிமா பயணம் என்பது கடுமையான சவால்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமானபோது, நடிக்கவே வரவில்லை, நடனமாட தெரியவில்லை என பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார் சூர்யா. பின்னர் படத்துக்கு படம் தன்னை மெருகேற்றிக் கொண்ட சூர்யா, எதை தனது நெகடிவ் ஆக சொன்னார்களோ, அதையே பாசிட்டிவ் ஆக மாற்றிக் காட்டினார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Kanguva Suriya

Kanguva Suriya

நடிக்க வராது என விமர்சித்தவர்கள் முன்னிலையில், தன்னைவிட சிறந்த நடிகன் இல்லை என சொல்லும் அளவுக்கு முன்னேறிக் காட்டிய சூர்யா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்று அசத்தினார். சூரரைப் போற்று படத்திற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. சூர்யாவுக்கு பின் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் அவரை மிஞ்சும் அளவுக்கு அடுத்தடுத்து  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர்.

36
Suriya Movies

Suriya Movies

ஆனால் நடிகர் சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்பது கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கூட இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் நிஜம். சூர்யா கடைசியாக பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த சிங்கம் 2. அப்படத்திற்கு பின் கடந்த 10 ஆண்டுகளில் அவர் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்தை கூட கொடுக்கவில்லை. இது அவரின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.

இதையும் படியுங்கள்... அடுத்த அஞ்சான் ரேஞ்சுக்கு ட்ரோல் செய்யப்படும் கங்குவா! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

46
Actor Suriya

Actor Suriya

சூர்யாவின் சமகால நடிகர்களான விஜய், அஜித் ஆகியோர் இன்று 100 கோடி, 200 கோடி என சம்பளம் வாங்கி வரும் நிலையில், சூர்யா இன்னும் 50 கோடியை எட்டுவதே மிக கடினமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர் படங்களின் தொடர் தோல்விகள் தான். இந்த 10 ஆண்டுகளில் சூர்யா வெறும் இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவை சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம். ஆனால் அதுவும் நேரடியாக ஓடிடி ரிலீஸ் ஆன படங்கள். இவை இரண்டும் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் சூர்யாவின் மார்கெட் எகிறி இருக்கும்.

56
Suriya Movie Result

Suriya Movie Result

சிங்கம் 2 படத்துக்கு பின் சூர்யா நடித்த அஞ்சான், மாஸ், பசங்க 2, 24, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா ஆகிய 10 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின. இந்த 10 படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக தோல்வி படங்களாக அமைந்தன. இதில் எதற்கும் துணிந்தவன், பசங்க 2 தவிர மற்ற படங்கள் அனைத்துமே அவர் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த படம். அதுவும் பிரபலமான இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த படங்கள்.

66
Suriya Flop Movies

Suriya Flop Movies

இப்படி தொடர்ச்சியாக 9 பிரபல இயக்குனர்களுடன் பணியாற்றியும் சூர்யாவால் வெற்றியை பெற முடியாததற்கு அவரின் கதைத் தேர்வு தான் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. மற்றபடி நடிப்பில் அவர் தன்னுடைய 100 சதவீதத்தை கொடுத்தாலும் கதை இல்லையென்றால் எந்தபடமும் எடுபடாது. அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கங்குவா படம். இப்படத்திற்காக 2 ஆண்டுகள் கடினமாக உழைத்தார் சூர்யா. அந்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போனது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இனி அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ள அவரின் 44-வது படம் மூலம் வெற்றியை கொடுப்பார் என சூர்யாவை போல நம்பிக்கையுடன் அவரது ராசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... டாப் மோஸ்ட் நடிகை நயன்தாரா கூட இல்ல; ஒரு பாட்டுக்கு 21 முறை காஸ்டியூம் சேஞ்சா? கங்குவா நடிகையின் சுவாரஸ்யம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved