ஒரு பாட்டுக்கு 21 முறை காஸ்டியூம் சேஞ்சா? கங்குவா நடிகை திஷா பதானியின் சுவாரஸ்யம் பற்றி தெரியுமா?
Disha Patani Changed 21 Costumes for Kanguva Yolo Song : கங்குவா படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்காக திஷா பதானி 21 முறை காஸ்டியூம் மாற்றிருக்கிறார். ஏன், அவ்வாறு செய்தார், அதற்கான சுவாரஸ்யமான காரணம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்…
Kanguva Yolo Songs, Kanguva Review, Yolo Songs Kanguva
Disha Patani Changed 21 Costumes for Kanguva Yolo Song : சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்த கங்குவா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து போதிலும் முதல் நாளில் ரூ.36 கோடி வசூல் குவித்துள்ளது. ஆனால், வர்த்தக நிபுணர்களின் கணிப்புப்படி, உலகளவில் முதல் நாளில் 75 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை விட குறைவாகவே வசூல் குவித்துள்ளது. அதே நேரத்தில், படம் 1000 கோடி வரை வசூல் செய்யும் என்று படத்தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறியபடி ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Kanguva Box Office Collection, Disha Patani 21 Times Change her Costume for Yolo Songs
இதற்கிடையில், படம் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தின் ஒரு பாடல் ஷூட்டிற்காக, முன்னணி நடிகை திஷா பதானி 21 முறை உடைகளை மாற்ற வேண்டியிருந்தது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அடிக்கடி உடைகளை மாற்றுவதால் அவர் சோர்வடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திஷா ஏன் அப்படி செய்ய வேண்டியிருந்தது என்ற கேள்வியும் எழுகிறது, அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்...
Kanguva Yolo Songs, Suriya and Disha Patani
திஷா பதானி ஏன் 21 முறை காஸ்டியூம் சேஞ்ச் பண்ணினார்?
சூர்யா மற்றும் திஷா பதானி நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தைப் பற்றி மக்களிடையே பெரும் ஆர்வம் காணப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் ஒரு பாடல் படப்பிடிப்பு தொடர்பான ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன் பேசிய திஷா, யோலோ பாடலின் படப்பிடிப்பின் போது, தொடர்ந்து 21 உடைகளை மாற்ற வேண்டியிருந்ததாகக் கூறினார்.
Kanguva Box Office Collection, Yolo Songs Kanguva
யோலோ பாடலை சிறப்பாக படமாக்க படத்தயாரிப்பாளர்கள் விரும்பினர். அதனால்தான் பல இடங்களில் பாடல் படமாக்கப்பட்டது. இதனால் திஷா மற்றும் சூர்யா அடிக்கடி இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. இந்த பாடலுக்காக திஷா 21 முறை உடைகளை மாற்ற வேண்டியிருந்தது. இந்தப் பாடலின் படப்பிடிப்பு 4 நாட்கள் நடந்தது. பாடல் படமாக்கப்பட்டபோது, முழு குழுவின் கவனமும் அதில் இருந்தது.
Disha Patani 21 Times Change her Costume for Yolo Songs, Kanguva Yolo Songs
10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான கங்குவா
கங்குவா திரைப்படம் நேற்று 10 ஆயிரம் திரைகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. படத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர், அதே நேரத்தில் பாபி தியோல் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, நடராஜன் சுப்பிரமணியம், கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோரும் நடித்துள்ளனர்
Yolo Songs Kanguva, Disha Patani 21 Times Change her Costume for Yolo Songs
இயக்குனர் சிவா இயக்கிய இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி. கங்குவா நாட்டின் மிகவும் விலை உயர்ந்த படங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. படம் 2019 இல் கோவிட் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதை உருவாக்க சுமார் 5 ஆண்டுகள் ஆனது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கங்குவா திரைக்கு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.