Rajinikanth
80-களில் இருந்தே, மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் உரிமையை வாங்கி அதை தங்களுடைய மொழிகளில், அங்கு பிரபலமாக இருக்கும் நடிகர் - நடிகைகளை வைத்து படம் இயக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தமிழில் உருவான பல படங்கள் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
அதே போல் மற்ற தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள்... தமிழில் ரீமேக் செய்து வெளியாகி மாஸ் வெற்றியை பதிவு செய்துள்ளன. சில இயக்குனர்கள், ஒரு படத்தின் தன்மையை அறிந்து ஒர்ஜினல் படைப்பை போலவே தங்களுடைய மொழிக்கு ஏற்ப இயக்கினாலும், ஒரு சில இயக்குனர்கள் அந்த படங்களில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அப்படி குறிப்பிட்ட மாற்றங்களோடு வெளியான படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகியுள்ளது.
Raghavendra Rao
அந்த வகையில் இயக்குனர் ராகவேந்திர ராவ், தமிழில் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில்... ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியான '16 வயதினிலே' படத்தை 'கரானா மொகுடு' என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார். அப்போது இந்த படத்தின் கிளைமேக்ஸை மாற்றியதால் ரஜினி மற்றும் கமல் இருவரும் தன்னை வீடு தேடி வந்து எச்சரித்ததாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
16 Vayathinile
ராகவேந்திர ராவ், கூறியுள்ளதாவது... 'நான் முதலில் தமிழில் எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தேன். எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு கிளைமேக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை. காரணம் முடிவில் சோகமாக இருந்தது. இந்த வகையான கிளைமாக்ஸை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தெலுங்கில் செல்லாது. எனக்கும் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. எனவே படத்தில் கண்டிப்பாக மகிழ்ச்சியான முடிவு இருக்க வேண்டும் என விரும்பினேன்.
ஆனால் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன படத்தின் கிளைமாக்ஸை மாற்றினால் படம் முழுவதும் கெட்டுப்போகலாம். அதுவும் ஆபத்துதான். இருந்தாலும் ரிஸ்க் எடுக்க துணிந்தேன்.
sridevi hit movie
தமிழ் படத்தில் "கடைசியில் ஹீரோ வில்லனை கொன்று, சிறைக்குச் செல்வார். ஹீரோயின்.. ஹீரோ எப்போது வருவார், தன் கழுத்தில் தாலி கட்டுவார் என்று காத்திருப்பது போல் இருக்கும். ஹீரோ வருவாரா? வரமாட்டாரா? என்று ஹீரோயின் காத்திருக்கும்போதே படத்தை ஒரு குழப்பத்துடனும் , வருத்தத்துடனும் முடித்திருப்பார்கள். ஹீரோ வரும் வரை அவள் வாழ்க்கை அவ்வளவுதான் என்பது போல தமிழில் ஒர்ஜினல் பதிப்பு இருக்கும்.
16 Vayathinile Telugu Remeake
ஆனால் ஹீரோ வந்து ஹீரோயின் கழுத்தில் தாலி கட்டினால் தெலுங்கு ரசிகர்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள் என நினைத்தேன். அதனால் தெலுங்கில் கிளைமாக்ஸை இன்னும் நீட்டித்தேன். ரயில் நிலையத்தில் மல்லி (ஸ்ரீதேவி) காத்திருக்க, ரயில் வருகிறது. ஸ்ரீதேவி தனது காதலனுக்காக எல்லா பெட்டிகளையும் ஆவலுடன் தேடுகிறார். ஆனால் சந்திரமோகன் தென்படவில்லை. தெலுங்கில் சந்திரமோகன் ஹீரோவாகவும், மோகன் பாபு வில்லனாகவும் நடித்தனர். தமிழில் நடித்த ஸ்ரீதேவி தான் தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஸ்ரீதேவி சந்திரமோகன் திரும்பி வரவில்லை என்று வருத்தத்துடன், இறக்கத் துணிகிறார். அப்போது மல்லி என்று சந்திரமோகனின் குரல் கேட்கிறது. சந்திரமோகன் பல வருடம் காத்திருந்த காதலி கழுத்தில் தாலி கட்டி ஏற்றுக்கொள்வது போல் இந்தப் படத்தை முடித்தேன்.
Rajinikanth
படம் வெளியீட்டிற்குத் தயாராக இருந்த போது... தெலுங்கு ரீமேக்கின் கிளைமாக்ஸை நான் மாற்றிய கதையை யாரோ கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரிடம் கூறி விட்டனர். இதை அறிந்த ஸ்ரீதேவி ராகவேந்திர ராவிற்கு போன் செய்து சொல்லி உள்ளார். ரஜினிகாந்த், கமல் உங்கள் வீட்டிற்கு வருகிறார்களாம் என்று இயக்குனருக்கு தகவல் வர... அவர் ஆச்சர்யத்தோடு கார்த்திருந்தாராம். ரஜினி - கமல் என அடுத்தடுத்து ராகவேந்திர ராவ் வீட்டுக்கு வந்து, நீங்கள் படம் முழுவதும் நன்றாக எடுத்தீர்கள்.. ஆனால் கிளைமாக்ஸை மாற்றுவதால் அந்த படத்தின் உணர்வு போய்விடும்.. படம் தோல்வியடையும் என்று எச்சரித்துள்ளனர். குறிப்பாக ரஜினி தான் இதை சொன்னாராம்.
Rajini and Kamalhaasan Warning
மேலும் ராகவேந்திர ராவிடம் தமிழில் உள்ள கிளைமாக்ஸை வைத்திருந்தால் நல்லது என்று கூறி உள்ளனர். இயக்குனர் ரஜினிகாந்தை பார்த்து, ஹீரோயின் அப்படி வாழ்நாள் முழுவதும் ஏன் குழப்பத்தில் இருக்க வேண்டும்? ஹீரோ சிறையில் இறந்துவிட்டார் என்று சொல்லுங்கள் சரி அது ஒரு முடிவாக இருக்கும்... இல்லை இன்னும் சில மாதங்களில் வருவார் என்று சொல்லுங்கள் பரவாயில்லை.. ஆனால் அவர் வருவாரா வரமாட்டாரா என்று தெரியாமல் ஏன் குழப்பத்துடன் முடிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ரஜினியிடம் பதில் இல்லை. இறுதியில் முதல் நாள் என் கிளைமாக்ஸுடன் படத்தை வெளியிடுகிறேன். ரிப்போர்ட் நன்றாக இருந்தால் தொடருவேன். ரிப்போர்ட் நன்றாக இல்லை என்றால் உங்கள் கிளைமாக்ஸிலேயே வைத்து விடுகிறேன் என்று ராகவேந்திர ராவ் உறுதி அளித்துள்ளார். ஆனால் முதல் நாளே பிளாக்பஸ்டர் ரிப்போர்ட்டுடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனவே 16 வயதினிலே படம் சூப்பர் ஹிட் ஆனது. ராகவேந்திர ராவின் நம்பிக்கை வீண் போகாமல் புதிய கிளைமேக்ஸுடன் தெலுங்கில் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.