"அதற்கும்" தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல; கங்குவா பட இசை - ஞானவேல் கொடுத்த விளக்கம்!
Kanguva Music : நேற்று நவம்பர் 14ஆம் தேதி பிரபல நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் உலக அளவில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Gnanavel Raja
கிட்டத்தட்ட இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் நேற்று நவம்பர் 14ஆம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட 38 மொழிகளில் உலக அளவில் 11,500 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றாலும், இந்த மொத்த திரைப்படத்தையும் சூர்யா தன்னுடைய தோள்களில் சுமந்து சென்றிருக்கிறார் என்பது தான் பலருடைய கருத்தாக இருந்து வருகிறது. அதற்கு ஏற்ப இந்த இரண்டு ஆண்டு காலம் கங்குவா திரைப்படத்திற்காக அவர் போட்ட உழைப்பு வீண் போகவில்லை என்றும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். முதல் நாளிலேயே உலக அளவில் சுமார் 40 கோடி தாண்டி கங்குவா திரைப்படம் வசூல் செய்திருக்கிறது.
தகவல் கொடுத்த ஸ்ரீதேவி! தெலுங்கு பட இயக்குனரை வீட்டுக்கே சென்று எச்சரித்த ரஜினி - கமல்!
Kanguva
இரு வேறு கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகை திஷா பாட்னி, பாலிவுட் நடிகர் பாபி தியால் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இரண்டரை ஆண்டுகளாக இந்த ஒரே ஒரு திரைப்படத்திற்காக தன்னுடைய முழு உழைப்பையும் சூர்யா வெளிப்படுத்தி உள்ள நிலையில், படமும் அதற்கு தகுந்தார் போல நல்ல முறையிலேயே வரவேற்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முதல் 20 நிமிடங்கள் படத்தில் மிகப்பெரிய தொய்வு தெரிவதாகவும். குறிப்பாக இசையில் பெரும் பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Kanguva Movie
இது மட்டுமல்லாமல் "இப்படி ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான திரைப்படத்தில் இவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்து உருவான ஒரு படத்தில் இசை குறித்த விமர்சனங்கள் எழுவது மனதிற்கு வருத்தத்தை தருகிறது. இது யாருடைய குற்றம்? இறுதி நேரத்தில் மக்களை மகிழ்விக்க கூடுதல் இசையை கொடுக்க செல்பவர்கள் குற்றமா? இசையமைப்பாளர்களின் குற்றமா? இதில் யாரை என்ன குறை சொல்வது? திரையரங்குகளில் உட்கார்ந்து தலைவலியோடு வெளியே வருபவர்கள் கூறும் கருத்துக்கள் படத்தை சரியான முறையில் கொண்டு செல்லாது" என்று ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி தெரிவித்திருக்கிறார்.
Devi Sri Prasad
இப்படி ஒரு இக்கட்டான சூழலில் இது குறித்த விளக்கம் ஒன்றை இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளியிட்டு இருக்கிறார். அதன்படி இந்த விஷயத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் மீது எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. சவுண்ட் மிக்சியில் வந்த பிரச்சனை தான் இது. மேலும் திரையரங்க உரிமையாளர்களிடம் இசையை இரண்டு புள்ளிகள் குறைத்து பயன்படுத்த சொல்லி இருக்கிறோம். அது மட்டுமல்லாமல் இந்த இசை சம்பந்தமான பிரச்சினை இன்று இரவே நிவர்த்தி செய்யப்பட்டு சரியான முறையில் திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என்றும் விளக்கம் அளித்து இருக்கிறார்.
ஜெயம் ரவி விவாகரத்து விவகாரத்தில் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!