அதன் பிறகு வாடகை தாய் மூலம் உயிர் மற்றும் உலகு என்கின்ற இரண்டு ஆண் குழந்தைகளை இந்த ஜோடி பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளை கடந்து மிகவும் சந்தோஷமான ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகையாக 75க்கும் மேற்பட்ட படங்களைக் கடந்து நடித்து வரும் நயன்தாரா, தனக்கென்று தனியே ஒரு நிறுவனத்தையும் இப்போது செயல்படுத்தி வருகிறார்.