பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகும் ரேஷ்மா? இதுதான் காரணமா?

First Published | Nov 16, 2024, 11:02 AM IST

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சீரியலில் இருந்து விலகப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. கார்த்திகை தீபம் சீரியலில் நடிப்பதால் பாக்கியலட்சுமியில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Reshma Pasupuleti

தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா பசுபலேட்டி. விஷ்ணு விஷால் நடித்த வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் துணை கதாப்பாத்திரத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் சில படங்களில் அவர் நடித்திருந்த நிலையில், அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. 

Reshma Pasupuleti

இதனிடையே 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் ரேஷ்மா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தார் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

Tap to resize

Reshma Pasupuleti

திரைப்படங்களை விட சீரியலில் அதிக வாய்ப்பு கிடைத்து. குறிப்பாக சீதா ராமம், அபி டெய்லர் உள்ளிட்ட  சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து கவனம் ஈர்த்தார். வில்லியாக மட்டுமே நடித்து வந்த ராதிகா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலுக்கென தனி ரசிக பட்டாளமே உள்ள நிலையில் ராதிகாவாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Reshma Pasupuleti

இந்த நிலையில் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் அவரின் இந்த போட்டோவால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரேஷ்மா விலகப் போவதாகவும் அதனால் தான் அவர் அந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

Reshma Pasupuleti

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் அவர் முக்கிய ரோலில் நடித்து வருவதால், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் ரேஷ்மா இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.  

Latest Videos

click me!