இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழையும் 5 போட்டியாளர்கள்! யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி விறுவிறுப்படைய 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

Biggboss Tamil 8 Wildcard contestants enters biggboss house today Rya
Biggboss Tamil 8

கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 7 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு கமல்ஹாசனும் மிக முக்கிய காரணமாகும். கமல்ஹாசனுக்காவே நிகழ்ச்சியை பார்த்த பலர் உள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் எல்லா சீசன்களிலும் கமல்ஹாசன் மீது சில விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 7வது சீசனில் கமல்ஹாசன் மீது கடுமையான விமர்சனங்கள் எழத்தொடங்கியது. இணையத்தில் பலரும் கமல்ஹாசனை ட்ரோல் செய்தும் வந்தனர்.

Biggboss Tamil 8 Wildcard contestants enters biggboss house today Rya
Biggboss Tamil 8

இந்த சூழலில் இந்த ஆண்டு தனது சினிமா மற்றும் அரசியல் வேலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. விஜய் சேதுபதியின் பெயர் தொடக்கம் முதலே அடிபட்டு வந்த நிலையில் கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார், போட்டியாளர்களை எப்ப்டி கையாள்வார் என்ற கேள்வியும் எழுந்தது. அந்த வகையில் கடந்த மாதம் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது விஜய் சேதுபதி சிறப்பாகவே தொகுத்து வழங்குவதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர்.


Biggboss Tamil 8

மேலும் வார இறுதி நிகழ்ச்சிகளிலும்  விஜய் சேதுபதி போட்டியாளர்களை கையாளும் விதம் நன்றாகவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
மிகவும் எதார்த்தமாகவும் அதே நேரத்தில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சரியான முறையில் சுட்டிக்காட்டுவதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால் மறுபுறம் இந்த சீசன் மற்ற சீசன்களை போல் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த சீசன் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், பெரிதாக இன்னும் நிகழ்ச்சி சூடுபிடிக்கவில்லை. 
 

Biggboss Tamil 8

எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய விருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது. 

அந்த வகையில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ரயான், நடிகரும் மாடலுமான ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, 2023-ம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் 2-வது இடம் பிடித்த ரியா தியாகராஜன் ஆகிய 5 பேரும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Biggboss Tamil 8 Wildcard Contestants

அதே போல் நடிகரும் மிமிக்ரி கலைஞருமான டிஎஸ்கே, சுஜா வருணியின் கணவரும் நடிகருமான சிவக்குமார்  ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 7 பேரில் எந்த 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப் போகின்றனர் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் இதே போல் மொத்தமாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். அதில் ஒருவரான அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!