விஜய் டிவியில் ரொமான்டிக் ட்ராமா ஜார்னரில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'நீ நான் காதல்'. இந்த சீரியல் 'இஸ் பியார் கோ கியா நாம் தூண்' என்கிற ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமைக்காக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பிரேம் ஜாக்கோ ஹீரோவாக நடிக்க, வர்ஷினி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சாய் காயத்ரி இரண்டாவது நாயகியாகவும், சங்கரேஸ் குமார் இரண்டாவது நாயகனாகவும் நடித்து வருகிறார். இவர்களை தவிர நவீன் முரளிதரன், சரவணன், ஷீலா, தமிழ்ச்செல்வி, கிரிஷ், சங்கீதா பாலன், ஹர்ஷா நாயர், மதுமிதா இளையராஜா, உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.