ஜீ தமிழ் தொடரில் இருந்து விலகிய ஹீரோயின்; சீரியலுக்கு வரும் அஜித் பட நடிகை யார் தெரியுமா?

First Published | Aug 21, 2024, 2:43 PM IST

நடிகை ஜாஸ்மின் ராத், ஜீ தமிழ் தொடரான 'நினைத்தேன் வந்தாய்' சீரியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அஜித் பட நடிகை நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் கலகலப்பான தொடர் 'நினைத்தேன் வந்தாய்'. இந்த சீரியலில் நடித்து வந்த, நடிகை ஜாஸ்மின் ராத் விலக உள்ளதாகவும் அவருக்கு பதிலாக நடிகை அபிராமி வெங்கடாச்சலம் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவி, விஜய் டிவி, தொலைக்காட்சி தொடர்களுக்கு அடுத்த படியாக, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தான் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக துவங்கிய சீரியல் 'நினைத்தேன் வந்தாய்'. இந்த சீரியலில் கணேஷ் வெங்கட்ராமன் டாக்டர் எழில் என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில்... நான்கு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்து வருகிறார்.

குட்டி தம்பியுடன் நிறைமாத நிலவாக ரித்திகா! வைரலாகும் வளைகாப்பு போட்டோஸ்!

Tap to resize

இவருக்கு ஜோடியாக கீர்த்தனா பொதுவாள் (இந்து) என்கிற கதாபாத்திரத்திலும், ஜாஸ்மின் ராத் (சுடர்) வேடத்திலும் நடித்து வருகிறார்கள். மருத்துவராக இருக்கும் எழில், ஆசிரமத்தில் படித்து வளர்ந்த இந்து மதியை, பார்த்த ஒரே பார்வையில் காதலிக்க துவங்கி, அவரையே திருமணம் செய்து கொள்கிறார். எழில் - இந்துவுக்கு நான்கு குழந்தைகள் பிறந்து மிகவும் சந்தோஷமாக இருக்கும் இவர்களின் குடும்பத்தை கெடுப்பது போல், எழிலின் தோழி மனோகரி உள்ளே நுழைகிறார்.

எழிலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படும் அவருடைய தோழி மனோகரியின் சதியால்.. இந்துமதி விபத்தில் சிக்கி இறக்க நேரிடுகிறது.  இந்துவின் மரணத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கும் எழிலுக்கு, அவருடைய குழந்தைகளையும் எப்படி சமாளிப்பது என தெரியாமல் திணற... குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டராக வீட்டுக்குள் நுழையும் சுடர் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். மேலும் சிறு வயதில் இருந்தே ஆசிரமத்தில் வளர்ந்த இந்துவின் சகோதரி தான் இந்த சுடர் என்பது மனோகரிக்கு தெரிய வருகிறது.

விஜயகாந்த் மகன் திருமணம் நிறுத்தப்பட்டது ஏன்? விஜய பிரபாகரன் கல்யாணம் எப்போது வெளியான தகவல்!

எனவே எப்படியும் சுடரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுக்கிறாள். தற்போது எழிலுக்கும் மனோகரிக்கும் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில்... எழில் எப்படி மனோகரியை தவிர்த்து, சுடரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? என்பதும்... மனோகரியின் சுயரூபம் எப்போது இவருக்கு தெரியவரும் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Ninaithen Vandhai

இந்த சீரியலில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்த சுடர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜாஸ்மின் ராத், திடீர் என இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.  மேலும் இவருக்கு பதிலாக, அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பிரபலமான நடிகையும், மாடலுமான அபிராமி வெங்கடாசலம் கமிட் ஆகியுள்ளார். கூடிய விரைவில் அபிராமி நடிக்கும் காட்சிகள் இந்த சீரியலில் இடம்பெறும் என தெரிய வந்துள்ளது. அதே நேரம் ஜாஸ்மின் ராத் ஏன் இந்த சீரியலை விட்டு விலகுகிறார் என்கிற எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'மகாராஜா' படத்திற்காக அரும்பாடுபட்டும்... மிஸ் செய்த இளம் நடிகர்! நித்திலன் பகிர்ந்த தகவல்!

Latest Videos

click me!