சீரியல் நடிகை ரித்திகாவுக்கு வளைகாப்பு... படையெடுத்து வந்து வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்

First Published | Aug 19, 2024, 7:37 AM IST

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை ரித்திகா தமிழ்செல்வியின் வளைகாப்பு நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Rithika Tamilselvi

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா தமிழ்செல்வி. அந்த தொடரில் வினோதினி என்கிற கேரக்டரில் நடித்த ரித்திகாவுக்கு, அடுத்ததாக கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா கேரக்டரில் நடிக்க சான்ஸ் கிடைத்தது.

Serial Actress Rithika Tamilselvi

சீரியலில் நடிக்கும்போதே டாப் டிரெண்டிங் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ரித்திகா, தன்னுடைய சமையல் திறமையை காட்டினார். அந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த ரித்திகா, ஒரு சில வாரங்களே தாக்குப்பிடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

Tap to resize

Rithika Tamilselvi Baby Shower

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலா உடன் சேர்ந்து இவர் செய்த அட்ராசிட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு கட்டத்தில் பாலாவும் ரித்திகாவும் காதலிப்பதாகவும் செய்திகள் உலா வந்தன. அதனையெல்லாம் பொய்யாக்கும் விதமாக கடந்த 2022ம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலன் வினுவை திருமணம் செய்துகொண்டார் ரித்திகா.

இதையும் படியுங்கள்... வாடகை பாக்கிவச்சுட்டு எஸ்கேப் ஆனேனா? கடுப்பான யுவன் - வீட்டு உரிமையாளருக்கு பறந்த நோட்டீஸ்!

Rithika Tamilselvi Baby Shower Photos

திருமணம் முடிந்த கையோடு, பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார் ரித்திகா. அதன்பின்னர் பெரிய அளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

Vijay TV Stars

இந்த நிலையில், நடிகை ரித்திகா தமிழ் செல்வியின் வளைகாப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்களான பாடகர் அஜய் கிருஷ்ணா, நடிகர் ஸ்ரீதேவி அசோக் குமார், நடிகை அம்மு அபிராமி, நடிகை ஜனனி ஆகியோர் கலந்துகொண்டு ரித்திகாவை வாழ்த்தினர்.

vijay TV celebrities

குறிப்பாக நடிகை அம்மு அபிராமி தன்னுடைய காதலனான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணி உடன் வந்து ரித்திகாவின் வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... தளபதி விஜயை அப்படியே பாலோ பண்ண ஜான்வி கபூர் - எந்த விஷயத்தில் தெரியுமா? வைரல் வீடியோ!

Latest Videos

click me!