வாடகை பாக்கிவச்சுட்டு எஸ்கேப் ஆனேனா? கடுப்பான யுவன் - வீட்டு உரிமையாளருக்கு பறந்த நோட்டீஸ்!
Yuvan Shankar Raja : சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் தான் தனது U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை ஒரு வாடகை வீட்டில் வைத்து இயக்கி வந்தார் யுவன் சங்கர் ராஜா.
Yuvan Shankar Raja
யுவன் ஷங்கர் ராஜா கடந்த 2015ம் ஆண்டு தனது சொந்த இசை நிறுவனத்தை துவங்கினார். அந்த நிறுவனத்தின் பெயர் தான் U1 Records. இசை ஆல்பங்கள், திரைப்பட பாடல்கள், சுயமாக கலைஞர்கள் உருவாக்கும் இதை ஆல்பங்கள் என்று பல இசை சம்மந்தமான விஷயங்களை அந்த நிறுவனத்தின் மூலம் அவர் செயல்படுத்தி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு வெளியான "யாக்கை" என்ற படம் தான், U1 Records மூலம் அவர் இசையமைத்த முதல் படமாகும்.
Music composer Yuvan
திரைப்படங்களுக்கு தனது U1 Records மூலம் இசையமைப்பதற்கு முன்னதாகவே, மறைந்த தனது அக்கா பவதாரிணி குரலில் சில Independent பாடல்களை அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் யுவனின் இந்த U1 ரெகார்டஸ் நிறுவனத்தின் அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தான் இயங்கி வந்தது. இந்த சூழலில் தான், அந்த வீட்டின் உரிமையாளர், யுவன் சங்கர் ராஜா மீது ஒரு அதிரடி புகாரை அளித்தார்.
Music Director Yuvan
அதாவது, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது வீட்டில் நடத்தி வரும் அவருடைய U1 ரெகார்ட்ஸ் நிறுவனத்திற்கான, சுமார் 20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி தரவில்லை என்றும், யுவன் சங்கர் ராஜா எந்த விதமான முறைப்படி தகவலும் அளிக்காமல் அண்மையில் அந்த இடத்திலிருந்து காலி செய்து சென்றதாகவும் பரபரப்பு புகாரை அந்த வீட்டின் உரிமையாளர் அளித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து யுவன் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.
Yuvan
சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் U1 ரெகார்ட்ஸ் இயங்கி வரும் வீட்டின் வாடகை தொடர்பான விஷயத்தில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும். வாடகை விவகாரத்தில் வீட்டு உரிமையாளருக்கு எதிராக சுமார் 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி யுவன் சங்கர் ராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.