காந்தினு பேர் வச்சாலே சரக்கு அடிக்கக்கூடாதா? GOAT ட்ரைலர் சர்ச்சைகள் - தக் லைஃப் ரிப்ளை கொடுத்த வெங்கட்!
Venkat Prabhu : வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜயின் GOAT படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
GOAT Trailer
முதல்முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து The Greatest of All Time என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று ஆகஸ்ட் 17ம் தேதி இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருவது அனைவரும் அறிந்ததே. வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேடி உலக அளவில் GOAT படம் வெளியாகவுள்ள நிலையில், அனைவரும் தளபதி விஜயின் குட்டி கதைக்காகத்தான் இப்பொது காத்திருக்கின்றனர்.
"இப்போ கூட அவங்கள கல்யாணம் பண்ணிக்க தயார்" முன்னாள் காதலி குறித்து மனம் திறந்த பாரதி ராஜா!
Thalapathy Vijay GOAT
ஏற்கனவே GOAT படத்தில் இருந்து வெளியான 3 சிங்கிள் பாடல்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது. அதே நேரம் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள டீ ஏஜிங் டெக்னாலஜி குறித்த சில சர்ச்சைகளும் அவ்வப்போது வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஸ்பார்க் பாடலில் வந்த விஜயை ட்ரோல் செய்த் பல மீம்கள் வெளியானதும் பலரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று GOAT ட்ரைலர் வெளியான நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார் வெங்கட் பிரபு.
Thalapathy Vijay
அப்போது GOAT படத்தில் விஜயின் பெயர் காந்தி, அப்படி இருக்க காந்தி மகானின் பெயரை வைத்துக்கொண்டு விஜய் குடிப்பதுபோல காட்டுவது முறையா? என்று கேள்வி எழுப்பப்பட, காந்தி என்று பெயர் வைத்தாலே சரக்கு அடிப்பது போல காட்டக்கூடாதா? என்னுடைய நண்பன் பெயர் காந்தி தான், அவன் என்னென்ன செய்கிறான் என்று தெரிந்தால் அவ்வளவு கோபம் வரும் என்று பேசினார் வெங்கட் பிரபு. மேலும் காந்தி மகானை ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது என்றும் கூறினார்.
Venkat Prabhu
அடுத்தபடியாக "இந்த படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளதாக கூறப்பட்டது, ஆனால் ஏன் ட்ரைலரில் அதை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்று ஒரு செய்தியாளர் கேட்க, படத்தில் இருக்கும் சுவாரசியங்கள் எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் என்ன பயன், படம் வெளியாகும் வரை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று பதில் அளித்தார்.
ஆஸ்கர் நாயகனுக்கு விழா.. மேடையிலேயே சூசகமாக மட்டம் தட்டிய இளையராஜா? - பதிலுக்கு அன்பால் அடித்த ARR!