செம க்யூட்.. நிறைமாத வயிற்றுடன்.. ட்ரெடிஷனல் போட்டோஷூட்.. ரித்திகாவின் உருக்கமான பதிவு..

Published : Aug 15, 2024, 07:25 PM IST

சின்னத்திரை நடிகை ரித்திகா கர்ப்பமாக இருக்கும் நிலையில், தனது கணவருடன் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

PREV
16
செம க்யூட்.. நிறைமாத வயிற்றுடன்.. ட்ரெடிஷனல் போட்டோஷூட்..  ரித்திகாவின் உருக்கமான பதிவு..
Actress Rithika

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் சீசன் ஒன்றில் வினோதினி என்ற கேரக்டரில் நடித்தவர் ரித்திகா. முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் 8, நம்மவர் கமல் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். 

 

26
Serial Actress

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட ரித்திகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்தார் ரித்திகா. இந்த சீரியல் மூலம் அதிகமான ரசிகர்கள் ரித்திகாவுக்கு கிடைத்தனர். 
 

36
Rithika Tamilselvi

இதனிடையே விஜய் டிவியில் பிரபலமான வினு என்பவருக்கும் ரித்திகாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் ரித்திகா மீண்டும் சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

 

46
Rithika Tamilselvi

ஆனால் திடீரென ரித்திகா இந்த சீரியலில் இருந்து விலகினார். சீரியலில் நடந்த மாற்றமா அல்லது வேறு  ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை. தற்போது அவரின் கேரக்டரில் வேறொரு நடிகை நடித்து வருகிறார். 

56
Rithika Tamilselvi

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி வயிற்றுடன் நடனமாடும் வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். 

 

66
Rithika Tamilselvi

இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமிர்தா தனது கணவரோடு சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பிங்க் நிற பட்டுப்புடவையில் தனது கணவருடன் சேர்ந்து மழையை ரசிப்பது, குழந்தையின் முதல் ஸ்கேன் போட்டோவை பார்ப்பது என அந்த வீடியோ பார்ப்பதற்கு படு க்யூட்டாக உள்ளது. மேலும் “ என்னுள் செல்வம்” என்ற கேப்ஷனையும் அவர் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

click me!

Recommended Stories