அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சனியனின் பேரனை ஷண்முகம் பிளான் போட்டு கடத்திய நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். இரண்டு சாமியாரோட உங்க பேரனை பார்த்தேன் என்று சொல்லி வீரா சனியனிடம் போட்டோவை காட்டுகிறாள். அதைப்பார்த்ததும் சனியன் ஷாக் ஆகிறான். பின்னர் அங்கு வரும் பரணி என்னாச்சு என்று கேட்க, சனியன் தன் பேரன் காணாமல் போன விஷயத்தை கூறுகிறார்.
24
Zee Tamil Anna Serial
உடனே ஷண்முகம் கிட்ட சொன்னா அவன் உங்கள் பேரனை கண்டுபிடிக்க உதவுவான் என்று பரணி சொல்கிறாள். நீங்க ஷண்முகத்திடம் உதவி கேப்பீங்களா என்று கேட்கும் பரணியிடம், என் பேரனுக்காக நான் உசுரையே கொடுப்பேன்மா என்று சொல்கிறான் சனியன். பின்னர் அவரை ஷண்முகத்திடம் அழைத்து செல்கிறார் பரணி. ஷண்முகம், உடன்குடி மற்றும் வெட்டுக்கிளியோடு சேர்ந்து சீட்டு ஆடிக் கொண்டிருக்கும் போது, அங்கு ஓடோடி வரும் சனியன், ஷண்முகத்திடம் உதவி கேட்கிறார்.
அந்த சாமியாரோடு பேரன் சென்ற விஷயத்தை சனியன் சொன்னதும், அவனுங்க மோசமானவங்களாச்சே.. உன் பேரனை கொலை பண்ணிடுவானுங்க என்று சொல்லி பயமுறுத்த சனியன் பதறி அழுகிறான். பிறகு உன் பேரனை எப்படியாவது காப்பாத்துறேன் என்று சொல்லிவிட்டு சண்முகம் கிளம்ப, அவனை சூடாமணி தடுத்து நிறுத்துகிறான். என் பொண்ணுங்க கஷ்டப்பட இந்த சனியனும் ஒரு காரணம் தான். அவனோட பேரனை காப்பாத்த நீ எதுக்குடா போகணும் என்று கேட்கம் சனியன் சூடாமணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறான்.
44
Anna serial Today Episode
அதன் பிறகு சனியனுடன் டீலிங் பேசும் ஷண்முகம் என் தாய் உத்தமினு ஊர் பஞ்சாயத்துல நீ எல்லோர் முன்னாடியும் சொன்னா தான், நான் உன் பேரனை காப்பாற்றுவேன் என்று சொல்கிறார். சனியனும் அதற்கு சம்மதிக்க, ஊர் பஞ்சாயத்து கூடுகிறது. சௌந்தரபாண்டி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு வருகிறார். உண்மை நிரூபிக்கப்படலேனா சூடாமணி கொளுத்திப்பேனு சொன்னான்ல அதுக்காகத்தான் மண்ணெண்ணெய் கேனுடன் வந்திருக்கேன் என சௌந்தரபாண்டி சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப்போகுது என்பதை அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.