கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை திருமணத்துக்கு ஓகே சொல்லி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். கார்த்திக், தீபா ஜோடியின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக நடக்கிறது. இந்த சமயத்தில் கல்யாண பத்திரிக்கை ரெடியாகிவிட்டதாக கூறி ஆனந்த் அதை அபிராமியிடம் கொண்டு வந்து கொடுக்க, அவரும் சந்தோசப்படுகிறாள்.
24
Zee Tamil Karthigai deepam serial
இதன் பின்னர் தீபா திருமண பத்திரிகையை பார்க்கிறாள். முன்னதாக கார்த்திக்கிற்கும் நட்சத்திராவுக்கும் திருமண நடக்க இருந்தபோது அடிக்கப்பட்ட பத்திரிகையில், கார்த்திக் பெயர் அருகில் இருந்த நட்சத்திரா பெயரை அடித்து விட்டு அதில் தன் பெயரை எழுதி அழகு பார்த்ததை நினைத்து பார்க்கிறாள் தீபா.
மறுபுறம் ரம்யாவை பெண் பார்க்க வந்த ரமேஷ், கார்த்திக்கு நெருக்கமானவர் என்பது ரம்யாவின் தந்தைக்கு தெரிய வருகிறது. உடனே ரம்யாவின் தந்தை விஸ்வநாதன், கார்த்தியை நேரில் சந்தித்து பேசுகிறார். நல்ல வேலை செஞ்சீங்க தம்பி, உங்களுக்கு நன்றி என சொல்கிறார். மேலும் இந்த ஏற்பாடையெல்லாம் செய்தது நீங்கள் தான் என்கிற விஷயம் மட்டும் மட்டும் ரம்யாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்.
44
Karthigai deepam serial Today Episode
அதன் பின்னர் அபிராமி கோவிலுக்கு செல்ல, ரம்யாவும் அவரையே பின் தொடர்ந்து செல்கிறாள். பெண் சித்தரை சந்தித்து மாங்கல்யத்தை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினால் கல்யாணம் நல்லபடியா நடந்துவிடும் என அபிராமி நினைக்க, அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என ரம்யா திட்டமிடுகிறாள். அடுத்து ஆனது என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.