சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தாவிய சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை... மகாநதி சீரியலில் இனி கங்கா இவர் தான்

Published : Aug 07, 2024, 12:20 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கங்காவாக நடித்து வந்த திவ்யா கணேஷ் விலகியதால் அவருக்கு பதில் யார் நடிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

PREV
14
சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தாவிய சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை... மகாநதி சீரியலில் இனி கங்கா இவர் தான்
mahanadi serial

விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் உணர்வுப்பூர்வமான கதையம்சத்துடன் மகாநதி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் லட்சுமி பிரியா, திவ்யா கணேஷ், ஆதிரை, காவ்யா ஆகியோர் சகோதரிகளாக நடித்து வந்தனர். இவர்களின் தந்தையாக சரவணனும், தாயாக சுஜாதா சிவகுமாரும் நடித்துள்ளனர்.

24
Divya Ganesh

இந்த சீரியல் டிஆர்பியிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்து வந்த திவ்யா கணேஷ், திடீரென அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திவ்யா கணேஷ். இதனால் அவரால் மகாநதி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததால் வேறுவழியின்றி திவ்யா கணேஷுக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... மகாநதி சீரியலிலிருந்து விலகுகிறேன்.. ஷாக் கொடுத்த கங்கா - ட்ரிப்ஸ் போட்ட கையோடு அவர் போட்ட பதிவு! என்ன ஆச்சு?

34
Divya Ganesh stepped out from Mahanadi serial

இதனால் இனி மகாநதி சீரியலில் கங்காவாக நான் தொடர மாட்டேன் என திவ்யா கணேஷ் அறிவித்ததோடு, தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வந்தனர். அது ஒருபுறம் இருக்க மகாநதி சீரியலில் திவ்யா கணேஷ் நடித்து வந்த கங்கா கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

44
Divya Ganesh, Dharani

அதற்கு தற்போது விடைகிடைத்து உள்ளது. அதன்படி திவ்யா கணேஷுக்கு பதிலாக நடிகை தாரணி இனி கங்காவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து வந்தார். தற்போது கங்காவாக மகாநதி சீரியலில் அவர் நடித்துள்ள காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளன. திவ்யா கணேஷை போல் அவரும் கங்காவாக ஜொலிப்பாரா என்பதை போகப்போக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... என் கடனை கட்ட முடியாதுன்னு அப்பா சொல்லிட்டாரு.. ஆனா என் வாழ்க்கையே மாறிடுச்சு.. சமந்தா ஓபன் டாக்..

click me!

Recommended Stories