மாப்பிள்ளை பார்க்கும் வேலையை தொடங்கிய தந்தை... ஓகே சொல்வாரா ரம்யா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published | Aug 5, 2024, 3:06 PM IST

கார்த்திகை தீபம் சீரியல் : கார்த்தி வீட்டில் திருமண கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், ரம்யாவுக்கு மறுபுறம் மாப்பிள்ளை பார்க்கும் பணி நடக்கிறது.

Karthigai deepam serial

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் உனக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேன் என தந்தை சொன்னதை கேட்டு ரம்யா அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவதை பார்க்கலாம். கார்த்திக் வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க தீபாவுக்கு மெஹந்தி போடும் நிகழ்ச்சியை நடத்த முடிவெடுக்கிறார்கள். வழக்கமான மெஹந்தி பங்க்‌ஷன் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்யலாம் என முடிவெடுத்த அபிராமி, கார்த்தியே தீபாவுக்கு மருதாணி போட்டு விட வேண்டும் என சொல்கிறாள். இதற்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். 

Zee Tamil Karthigai deepam serial

தீபாவுக்கு மெஹந்தி போடத் தயாரான கார்த்தியை, ஆபீஸ்ல எல்லாரையும் நீ வேல வாங்கிட்டு இருந்த, இப்போ பாத்தியா உன் பொண்டாட்டிக்கு மெஹந்தி போடுற மாதிரி ஆயிடுச்சு உன் நிலைமை என்று அருண் கலாய்த்து சிரிக்கிறார். உடனே கார்த்திக் பதிலுக்கு, நான் தீபாவுக்கு மெஹந்தி போடுற மாதிரி நீங்களும் உங்க பொண்டாட்டிக்கு போடுங்க என்று மாட்டி விடுகிறான். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் தங்கள் மனைவிக்கு மெஹந்தி போட்டு விடுகின்றனர். 

இதையும் படியுங்கள்... ஹனி மூனுக்கு நாள் குறித்து விடலாம்.! வாயை விட்ட வனிதா விஜயகுமாருக்கு... ஷாக் கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன்!

Tap to resize

Karthigai deepam serial Update

மெஹந்தி போட்டும் விடும் கார்த்தியிடம் எப்படியும் கை எனக்கு நல்லா சிவக்கும்னு தெரியும், அப்படி சிவந்தா நீங்க காதலை ஒத்துக்கொள்வீர்களா என்று தீபா கேட்க, அதற்கு ஒற்றை பார்வை பார்க்கும் கார்த்திக், பாத்துக்கலாம் என்று அசால்டாக பதில் சொல்கிறார். அதன் பின்னர் மெஹந்தி போட்டு கொஞ்சம் நேரம் விட்டு அனைவரும் தங்கள் கைகளை கழுவிவிட்டு பார்த்தபோது, அதில் தீபாவின் கை மட்டும் நன்றாக சிவந்து இருக்கிறது. பின்னர் கார்த்திக்கிடம் வந்து இது பற்றி கேட்டது, அவன் போயிட்டு அண்ணியிடம் கேளுங்க என்று சொல்கிறான். 

Karthigai deepam serial Today Episode :

பின்னர் மீனாட்சியிடம் தன் கை மட்டும் அதிகம் சிவந்தது ஏன் என தீபா கேட்க, அதற்கு உனக்கு கொடுத்தது மட்டும் தான் ஒரிஜினல் மருதாணி மற்றவர்கள் வைத்தது மருதாணியே கிடையாது என்றும், அதை நான்தான் மாற்றி வைத்தேன் எனவும் சொல்கிறாள் மீனாட்சி. இதையடுத்து வீட்டுக்கு வந்த புரோக்கரிடம் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று தந்தை பேசுவதை கேட்டு ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்டை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து தோல்வி... என் படத்தை தயாரிக்க மறுத்து தயாரிப்பாளர் ஓடிவிட்டார் - பிரபாஸின் வாழ்வை மாற்றிய தருணம்

Latest Videos

click me!