MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹனி மூனுக்கு நாள் குறித்து விடலாம்.! வாயை விட்ட வனிதா விஜயகுமாருக்கு... ஷாக் கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன்!

ஹனி மூனுக்கு நாள் குறித்து விடலாம்.! வாயை விட்ட வனிதா விஜயகுமாருக்கு... ஷாக் கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன்!

வனிதா விஜயகுமார் நடித்துள்ள வைஜெயந்தி ஐபிஎஸ் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், வனிதா மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் இருவரும் கலகலப்பாக மேடையில் பேசிக்கொண்ட பேச்சு தற்போது வைரல் ஆகி வருகிறது. 

3 Min read
manimegalai a
Published : Aug 05 2024, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Vanitha Vijayakumar born with golden spoon

Vanitha Vijayakumar born with golden spoon

வனிதா விஜயகுமார் பிறப்பிலேயே கோல்டன் ஸ்பூன் என்றாலும், இவருடைய அம்மா இறப்புக்கு பின்னர் தந்தை மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டு வாடகை வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.  இந்த சூழலில் இருந்து வெளியே வர, மீண்டும் வனிதா நடிக்க முடிவு செய்த நிலையில்... அதற்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே வந்து, வத்திக்குச்சி வனிதாவாக மாறி இவர் கொளுத்தி போட்ட பட்டாசுகள் அனைத்தும் பிரச்சனையாக மாறி பட்டு பட்டு என வெடித்தாலும் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்க பட்ட பிரபலமாக மாறினார்.
 

28
vanitha vijayakumar BB Wild Card Entry:

vanitha vijayakumar BB Wild Card Entry:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், மீண்டும் மக்களின் ஆதரவோடு வயல்காடு சுற்றிலும் நுழைந்த ஒரே பிரபலம் வனிதா மட்டுமே. இரண்டாவதாக கிடைத்த வாய்ப்பையும் வனிதா சரியாக பயன்படுத்தி கொள்ளாமல், பைனலுக்கு செல்லும் முன்னரே வெளியேறினார்.

ஜோதிகா முதல்... கீர்த்தி சுரேஷ் வரை! ஃபிலிம் பேர் 2024 விருது விழா மேடையை அலங்கரித்த பிரபலங்கள்! போட்டோஸ்!
 

38
Vanitha vijayakumar Got Movie Chance:

Vanitha vijayakumar Got Movie Chance:

ஆனால் டைட்டில் வென்ற போட்டியாளர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வரும் நிலையில், வனிதாவுக்கு விஜய் டிவி மூலம் அடுத்தடுத்து ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் சீரியலிலும் கவனம் செலுத்திய வனிதா, வெள்ளித்திரையில் படு பிஸியான நடிகையாக உள்ளார்.
 

48
Vanitha Vijayakumar and peter paul marriage

Vanitha Vijayakumar and peter paul marriage

எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் பின்னி பெடல் எடுத்து வரும் வனிதா, தானே உருவாக்கிய Youtube சேனலுக்காக பீட்டர் பால் என்பவரை சந்திக்க, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறி, இருவரும் வீட்டிலேயே எளிமையான முறையில் மோதிரம் மாற்றிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.  பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த வனிதா, பீட்டர் பாலின் முதல் மனைவியால் பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்தார். ஆனால் பீட்டர் பால் அவருடைய முதல் மனைவி கூறுவது போல் கிடையாது என அடித்து ஆணித்தனமாக கூறிவந்த வனிதாவுக்கு ஒரு கட்டத்தில் பீட்டர் பாலின் உண்மை சுயரூபம் தெரியவர, மூனே மாதத்தில் பீட்டர் பாலிடம் இருந்து விலகினார்.

பிரேம்ஜிக்கு பெண்ணே கொடுக்க கூடாதுனு சொன்னேன்..! மனம் மாறியது எப்படி? மாமியார் கூறிய தகவல்!
 

58
Jovika Enter in Bigg boss:

Jovika Enter in Bigg boss:

ஒருவழியாக அந்த விபத்தில் இருந்து வெளியேறி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய வனிதா, தன்னுடைய மகள் ஜோவிகாவுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததாலும், நடிப்பிலும், சினிமா துறையிலும் ஆர்வம் உள்ளதால் அதுகுறித்த பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணியாற்ற வைத்துள்ளார். 

68
Vanitha vijayakumar pickup movie:

Vanitha vijayakumar pickup movie:

மகள் ஜோவிகா பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெறமுடியாத பிரபலத்தை வனிதா பெற்றார். அந்த வகையில் இதுவரை சுமார் 17 படங்களில் நடித்துள்ளதாக கூறியுள்ளார் வனிதா. குறிப்பாக பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜோடியாக வனிதா நடித்த பிக்கப் திரைப்படம் ஒரு சில காரணங்களால் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. இந்த படத்தில் பவர் ஸ்டார் உடன் டூயட், ரொமான்ஸ், திருமணம், என விதவிதமான காட்சிகளில் நடித்து களைகட்ட வைத்துள்ளார்.

உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சி.. கீர்த்தி சுரேஷால் பளபளவென்று மாறிய Filmfare Awards விழா - ஹாட் கிளிக்ஸ் இதோ!

78
power star srinivasan:

power star srinivasan:

இது ஒருபுறம் இருக்க, நீண்ட நாட்களுக்கு பின்னர் வனிதா நடித்துள்ள 'வைஜயந்தி ஐபிஎஸ்' திரைப்படத்தின் பட விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது அனைவர் மத்தியிலும் பேசத் துவங்கிய பவர்ஸ்டார், வனிதா தன்னுடைய சிறந்த தோழி என கூறினார். உடனே அவரது பேச்சை தடுத்து நிறுத்திய வனிதா, என்னது தோழியா? நமக்கு கல்யாணமே செஞ்சு வச்சுட்டாங்க. நான் வெளியூருக்கு போகும்போது சிலர் நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யானை திருமணம் செய்து கொண்டீர்களா? என கேட்கிறார்கள். ஆனால் நான் பவர் ஸ்டார் சீனிவாசன் தான் திருமணம் செய்து இருக்கிறேன் என கூறி வந்தேன் என்று கலகலப்பாக கூறினார்.

88
power star srinivasan honey moon speech

power star srinivasan honey moon speech

ஆனால் உங்களை திருமணம் செய்து ஒன்றுமே நடக்கல என்று வனிதா வாயை விட, இதற்கு பவர்ஸ்டார் நானும் இங்கே இருப்பது இல்ல... நீங்களும் அடிக்கடி தாய்லாந்து போயிடுவீங்க. சரி ஒரு நாள் ஹனி மூனுக்கு நாள் குறித்து விடலாம் என்று பேசி, அரங்கத்தையே சிரிப்பலையால் மூழ்க வைத்துள்ளனர். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

விருது விழாவுக்கு இப்படியா டிரஸ் பண்ணிட்டு வர்றது! படு கிளாமரான ஆடையில் வந்த ஜோதிகா; விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved