ரம்யாவுக்கு பளார் என அறைவிட்ட கார்த்திக்.. மொத்த உண்மையும் உடைந்ததா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Published : Aug 02, 2024, 03:29 PM IST

ரம்யா பற்றிய உண்மைகளை சொல்ல அவரது தந்தை கார்த்திக்கை அழைத்திருந்த நிலையில், அவர் என்ன சொன்னார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
ரம்யாவுக்கு பளார் என அறைவிட்ட கார்த்திக்.. மொத்த உண்மையும் உடைந்ததா? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
Karthigai deepam serial

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா அபிராமியுடன் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். கோவிலுக்கு வருபவர்களின் காலை கழுவிவிட்டு, அபிராமி பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார். தீபாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் அவர் ஓடி வந்து அபிராமியிடம் எதுக்கு அத்தை இப்படிலாம் பண்றீங்க என்று கேட்டு வருத்தப்படுகிறாள். என் கல்யாணத்தப்போ என் அம்மா இப்படி செய்தார், இப்போ நீங்களும் எனக்காக இப்படி செய்றீங்க என்று எமோஷனலாக பேசுகிறாள்.

24
Zee Tamil Karthigai deepam serial

இதைத் தொடர்ந்து ரம்யாவின் தந்தை கார்த்திக்கை வீட்டுக்கு வர வைத்து ரம்யா அவனை காதலிக்கும் விஷயத்தையும், டைரியில் இது குறித்து எழுதி வைத்திருப்பதையும் சொல்கிறார். இதைக் கேட்டு கடுப்பாகும் கார்த்திக், ரம்யா வீட்டிற்கு சென்று அவளை பளார் என ஒரு அறை விடுகிறான். ஆமா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், அதுக்காக தான் இப்படி செஞ்சேன் என ரம்யா சொல்ல, இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்குன்னு கேட்க, ரம்யாவின் அப்பா போலீசுடன் உள்ளே வருகிறார். 

இதையும் படியுங்கள்... அப்படியே அம்மா சாயிஷாவை உரித்து வைத்திருக்கும் ஆர்யா மகள் அரியானா! 3-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

34
Karthigai deepam serial Update

உங்களை கைது செய்யப்போகிறோம் என போலீஸ் சொல்ல, திடீரென போலீஸ் துப்பாக்கியை எடுக்கும் ரம்யா, தன்னை தானே சுட்டுக் கொள்கிறாள். இதனால் ரம்யாவின் தந்தையும், அங்கிருந்த போலீசும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் தான் இது அவருடைய கனவு என தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கிடம் அந்த உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறார் ரம்யாவின் தந்தை. ஆனால் கார்த்திக் அவர் சொன்னதால் வீட்டிற்கு வந்து விட, ஆள் மாற்றி போன் செய்து விட்டதாக மழுப்பி விடுகிறார். 

44
Karthigai deepam serial Today Episode

அதன் பின்னர் தீபாவுடன் கோவிலுக்கு செல்லும் கார்த்திக், அங்கு காரை பார்க் செய்து விட்டு வரப் போன கேப்பில் தீபா தன்னுடைய தலையில் இருந்த பூவை எடுத்து விட்டு, கார்த்திக் வந்ததும் பூ வாங்கி தனக்கு வைத்து விடுமாறு சொல்கிறாள். உன் தலையில ஏற்கனேவே பூ இருந்ததே என்று கார்த்திக் கேட்க தீபா இல்லை என்று சொல்கிறாள். உடனே அருகில் இருந்த பூக்கடைக்காரர் அந்த பொண்ணு உங்க கையால பூ வச்சுக்கணும்னு ஆசைப்படுத்து வாங்கி வச்சி விடுங்க தம்பி என்று சொல்ல, கார்த்திக்கும் பூ வாங்கி தீபாவுக்கு வைத்து விடுகிறான். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து நடக்க போகிறது என்பதை அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... ஆஸ்கரில் கிடைத்த அங்கீகாரம்... சர்வதேச அளவில் கொண்டாடப்படும் தனுஷின் ராயன்

Read more Photos on
click me!

Recommended Stories