மகாநதி சீரியலிலிருந்து விலகுகிறேன்.. ஷாக் கொடுத்த கங்கா - ட்ரிப்ஸ் போட்ட கையோடு அவர் போட்ட பதிவு! என்ன ஆச்சு?
Actress Divya Ganesan : மகாநதி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திவ்யா, அந்த சீரியலில் இருந்து விலகுவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
Actress Divya Ganesan
கடந்த 2015ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய "கேளடி கண்மணி" என்கின்ற நாடகத்தில் "செம்பருத்தி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் திவ்யா கணேசன். தொடர்ச்சியாக இவர் பல நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.
பிளாக் கலர் ட்ரான்ஸ்பெரண்ட் உடையில் மயக்கும் தங்கலான் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..
Divya Ganesan
தமிழ் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திவ்யா கணேசன், "சுமங்கலி" என்கின்ற நாடகத்தில் "அணு" என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார்".
Actress Divya
அதன்பிறகு பாக்கியலட்சுமி என்ற சீரியலிலும் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய திவ்யாவிற்கு சீரியல் வாய்ப்புகள் பெறுக தொடங்கியது. இந்த சூழலில் தான் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய "மகாநதி" என்கின்ற சீரியலில் "கங்கா" என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்க தொடங்கினார்.
Mahanadi
ஆனால் தற்பொழுது மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பின்படி, தனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும். ஆகையால் இனி தன்னால் கங்காவாக, மகாநதி சீரியலில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரதீப் ஆண்டனி விஷயத்தில் நீதி தவறியது தான் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணமா?