பிரதீப் ஆண்டனி விஷயத்தில் நீதி தவறியது தான் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணமா?
உலகநாயகன் கமலஹாசன் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், கடந்த சீசனில் இவர் நீதி தவறி நடந்து கொண்டதாக விமர்சிக்கப்பட்டது தான் இதற்க்கு காரணமா? என சமூக வலைதளத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
Multi Talented Kamalhaasan:
உலக நாயகன் கமலஹாசன், நடிகர் என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர் என பன்முக திறமையாளராக ரசிகர்களால் அறியப்படுபவர். மேலும் இவரை ஒரு தொகுப்பாளராக பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது பிக் பாஸ் நிகழ்ச்சி.
Kamalhaasan Anchor Journey:
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழிலும் அதே பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் கமலஹாசன் தொகுப்பாளராக களம் இறங்கி கலக்கினார். குறிப்பாக பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் இடம்பெறுவது போல், குழந்தைகள் பார்ப்பதற்கு தகுந்த நிகழ்ச்சி இல்லை எனக் கூறி சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்ப கூடாது என சிலர் போர்க்கொடி தூக்கினர்.
Kamalhaasan Develop the Show:
ஆனால் இந்த நிகழ்ச்சியை புதிய கோணத்தில் பார்க்குமாறு கூறி தன்னுடைய வார்த்தைகளாலேயே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கமலஹாசன். அதேபோல் வாரத்தில் ஐந்து நாட்கள் நிகழ்ச்சி சற்று டல்லடித்தாலும், கமலஹாசன் அகம் டிவி வழியாக தோன்றும் சனி மற்றும் ஞாயிறுகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறிவிடும். போட்டியாளர்களுக்குள் நடக்கும் பிரச்சனை குறித்து சாட்டையடி கேள்விகளால், அவர்களுக்கு வலிக்காமல் பதிலடி கொடுப்பதில் வல்லவர் கமலஹாசன்.
Bigg boss season 7 issue:
வெற்றிகரமாக கடந்த ஏழு ஆண்டுகள் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெளியேறுவதாக கமலஹாசன் அறிவித்துள்ளார். இதற்கு கடந்த சீசனில் கமலஹாசன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும், அவர் நீதி தவறிவிட்டதாக கூறியதும் தான் காரணமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Pradeep antony Controversy
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரதீப் ஆண்டனி. இவர் ஒரு சில ஸ்டெட்டர்ஜியுடன் இந்த விளையாட்டை விளையாடினாலும், விளையாட்டில் நேர்மையாக இருந்தார். ஆனால் அவரை எப்படியும் வெளியேற்ற வேண்டும் என சிலர் போட்ட திட்டம் பலித்தது. பிரதீப் பற்றி வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சரியாக விசாரிக்காமல், அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சிலர் கூறிய மோசமான விஷயங்களை நம்பி கமலஹாசன் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்தது வெளியேற்றினார்.
Kamalhaasan Bad Judgement:
பின்னர் இதை மறைக்க கமல் எத்தனையோ காரணங்கள் கூறினாலும், கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறந்த நீதிமானாக இல்லை. பிரதீப் ஆண்டனிக்கு அநீதி இழைத்து விட்டதாகவே பார்க்கப்பட்டது. அதேபோல் நிக்சன் அர்ச்சனாவை பார்த்து சொருகிடுவேன் என சொன்னதை பெரிதாக கண்டு கொள்ளாமல், தினேஷ் தவுலத்து என கூறிய வார்த்தைக்கு பத்து நிமிஷம் குறையாமல் விளக்கம் கொடுத்தார். மாயாவை இவர் செக்கியூர் செய்யவே இப்படி கூறியதாகவும் பார்க்கப்பட்டது.
கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியல் பிரபலம்! யார் தெரியுமா?
Kamalhaasan Quit Bigg boss:
இப்படி பல்வேறு விமர்சனங்களை கமலஹாசன் கடந்த ஆறு சீசங்களில் இல்லாத வகையில், ஏழாவது சீசனில் சந்தித்தார். எனவே இது தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் விலகி காரணமா? என ஒரு சிலர் சந்தேக கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். ஆனால் கமல்ஹாசன் தன்னுடைய பணிகள் காரணமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.