புதுமாப்பிள்ளைக்கு ரம்யா விடுத்த மிரட்டல், தீபாவின் முடிவு என்ன? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published | Aug 6, 2024, 3:43 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் ரம்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கப்பட்ட நிலையில், இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

Karthigai deepam serial

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவின் தந்தை புரோக்கரை வரவழைத்து தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லிய நிலையில் இன்று என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம். கல்யாண புரோக்கருடன் அப்பா வருவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள் ரம்யா. தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல, புரோக்கரும் சில போட்டோக்களை கொடுத்து ஒரு மாப்பிளையை தேர்வு செய்து அவர்களிடம் பேசுமாறு சொல்கிறார். இதனால் ரம்யா மேலும் ஷாக் ஆகிறாள். 

Zee Tamil Karthigai deepam serial

மறுபுறம் விசுவநாதன் கார்த்தியை நேரில் சந்தித்து நீங்க சொன்னபடியே செஞ்சுட்டேன் தம்பி என்று சொல்ல, இன்னொரு பக்கம் ரம்யா புரோக்கரை பாதியில் மடக்கி அவரிடம் இருந்து மாப்பிள்ளையின் செல்போன் நம்பரை வாங்குகிறாள். பிறகு ரியாவை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லும் ரம்யா, அவளிடம் உதவி கேட்கிறாள். அவள் கொடுத்த ஐடியா படி, மாப்பிள்ளைக்கு போன் பண்ணி, நீ என்னை பொண்ணு பார்க்க வரக்கூடாது, அப்படி இல்லேனா என்னை புடிக்கலனு சொல்லிடணும் என்று மிரட்டியதும், அவனும் ஓகே என சொல்லி போனை வைக்கிறான்.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் உடன் பிரேக் அப்... ஸ்ருதிஹாசன் தான் காரணமா? உண்மையை போட்டுடைத்த நடிகை கெளதமி

Tap to resize

Karthigai deepam serial Update

அதன் பின்னர் தர்மலிங்கம், தீபாவுக்கு இந்த கல்யாணம் நடக்கவே கூடாது என்றும், அதையும் மீறி ஒருவேளை இந்த கல்யாணம் நடந்தால் அபிராமி அம்மா உயிருக்கே ஆபத்து வரும் என எச்சரிப்பதோடு, எப்படியாவது இதை தடுத்து நிறுத்திடனும் என்று பேசி கொண்டிருக்கிறார். இதை ஐஸ்வர்யா நைசாக ஒட்டுக்கேட்டு விடுகிறாள். 

Karthigai deepam serial Today Episode

கார்த்தியிடம் நடந்த விஷயத்தை சொல்லிடலாம் என்று முடிவெடுக்கும் ஐஸ்வர்யா, அவனை தேடி அவனது ரூமுக்கே சென்று மொத்த விஷயத்தையும் உடைக்கிறாள். அப்போது தீபாவும் அங்கிருக்கிறாள். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்னென்ன ட்விஸ்ட் இருக்கிறது என்பதை மிஸ் பண்ணாம பாருங்கள்.

இதையும் படியுங்கள்... தடுக்க யாரும் வரல... தங்கலான் ஆடியோ லாஞ்சில் மேடையிலேயே சண்டை போட்ட மாளவிகா - பார்வதி

Latest Videos

click me!