கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த கல்யாணம் நடந்தால் அபிராமி உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவிடம் ஐஸ்வர்யா உண்மையை உடைத்த நிலையில் இன்று நடக்கப் போவதை பார்க்கலாம். ஐஸ்வர்யா சொன்னதைக் கேட்டு ஷாக்கான தீபா, நேராக அபிராமியிடம் சென்று, இந்தக் கல்யாணம் வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என சொல்கிறாள். உடனே அபிராமி அதெல்லாம் ஒன்னும் இல்லை உன் அப்பா அம்மா சொன்னதா தான சொன்னாங்க, அவங்கள கூப்பிடு கேட்கலாம் என்று தீபாவின் பெற்றோரை வரவைத்து விசாரிக்கையில், அவர்கள் நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என சொல்கின்றனர்.
24
Zee Tamil Karthigai deepam serial
மேலும் இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்க வேண்டும் என்று தான் பேசிக்கொண்டு இருந்ததாக சொல்கின்றனர். உடனே தீபா, இனிமேல் இன்னொரு வாட்டி இதுமாதிரி ஏதாச்சும் பண்ணீங்க என்னை வேற மாதிரி ஆளா பார்ப்பீங்க என்று ஐஸ்வர்யாவை எச்சரிக்கிறார். அபிராமியும் தன் பங்கிற்கு ஐஸ்வர்யாவை செம்மயாக திட்டி விடுகிறாள். அதன் பின்னர் ரம்யாவை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதால், மீனாட்சி, மைதிலி மற்றும் தீபா ஆகியோர் ரம்யாவை அழகுபடுத்துகின்றனர்.
மாப்பிள்ளை ரமேஷ் வீட்டுக்கு வந்ததும், காபி கொண்டு போய் கொடுக்குமாறு ரம்யாவை சொல்கிறார்கள். அதற்கு அவள் நான் ஒரு பெரிய கம்பெனியோட ஓனர், நான் எப்படி இதெல்லாம் பண்ணுவேன் என்று சொல்லி கொடுக்க மறுக்கிறாள். உடனே தீபா அவளிடம் இதெல்லாம் காலம் காலமா இருக்கு, நீ நெனச்சதும் அதை மாற்றிவிட முடியாது என்று சொல்லி மனசை மாற்றி, ரம்யாவிடம் காபியை கொடுத்து அனுப்புகிறாள். ரம்யாவும் தீபா பேச்சை கேட்டு, காபி கொண்டு வந்து கொடுக்கிறாள்.
44
Karthigai deepam serial Today Episode
ரம்யாவின் அப்பா மாப்பிள்ளையை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக சொல்கிறார். ரம்யாவும் ரமேஷ் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவான் என்கிற தைரியத்தில் தனக்கு ரமேஷை பிடித்திருப்பதாக சொல்லிவிடுகிறாள். ஆனால் மாப்பிள்ளையாக வந்த ரமேஷ் தனக்கு ரம்யாவை பிடித்திருப்பதாக சொல்ல, ரம்யா கடுப்பாகிறாள். இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கின்றனர். உடனே தட்டையும் மாற்றுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக ரம்யா கல்யாணத்தில் என்னென்ன ட்விஸ்ட் என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.