பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கியவர் இவர் தானாம்.. ஆத்தி இவ்வளவா?

First Published | Aug 15, 2024, 3:54 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கியவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் தான் அதிக சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Biggboss Tamil

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென  தனி ரசிக பட்டாளமே உள்ளனர். பல ரியாலிட்டி ஷோ இருந்தாலும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஒரு சில நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 
 

Kamalhaasan

இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசனே அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார். வாரம் முழுவதும் பார்க்கும் ரசிகர்கள் வார இறுதியில் கமலின் எபிசோடுக்காக ஆர்வமுடன் காத்திருப்பார்கள். 

Tap to resize

Biggboss Tamil

கமல்ஹாசனும் தனது பணியை சிறப்பாகவே செய்து வந்தார். ஆனால் கடந்த சீசனில் தனது பாரபட்ச நடவடிக்கைக்காக கமல்ஹாசன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக பிரதீப் ஆண்டனி வெளியேற்றம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுதியது. மேலும் கடந்த சீசன் முழுவதும் கமல்ஹாசனின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டதுடன் தொகுப்பாளரை மாற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வந்தனர். 

Biggboss Tamil

இந்த நிலையில் தனது படப் பணிகள் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து பிக்பாஸ் 8 சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி அல்லது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
 

Bigg Boss Tamil contestant

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கான தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அதிக சம்பளம் வாங்கியது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாருமில்லை. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற விசித்ரா தான்.

Biggboss Tamil Vichitra

கடந்த சீசனில் பங்கேற்ற அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்பட்டதாம். அதன்படி அவர் 97 நாட்கள் இருந்து வெளியேறியதால் அவருக்கு ரூ.29,10,000 சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக சம்பளம் பெற்ற போட்டியாளர் விசித்ரா தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

Latest Videos

click me!