மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி தற்போது 'தங்கமகள்' என்கிற சீரியலில் நடித்து வரும் நிலையில், மற்றொரு புதிய சீரியலிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார் இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில், புதுமையான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் 'தங்கமகள்'. இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
25
Yuvan Mayilsamy Play Lead Role
இந்த தொடரில், யுவன் மயில்சாமி ஹீரோவாக நடிக்க... அஷ்வினி அனந்திட்டா கதாநாயகியாக நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நீபா சிவா, தலைவாசல் விஜய், சாய் ரித்தி, சியாரா ஷாலினி, மனுஸ்ரீ கார்த்திகேயன், காயத்ரி ஜெயராமன், அஜய் ரத்னம் போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.
ராமசாமியை (தலைவாசல் விஜய்), நண்பர்கள் ஜூஸ் என கொடுத்த மதுவை அருந்திவிட்டு, ஹாசினி (அஷ்வினி) கார் ஓட்டி செல்லும் போது ராமசாமி விபத்தில் சிக்கி மரணம் அடைகிறார். எனவே ஹாசினியின் அம்மா, அவரின் மூன்று மகள்களில் யாராவது ஒருவரிடமாவது மன்னிப்பு வாங்கிய பின்னரே மீண்டும் வீட்டுக்குள் வரவேண்டும் என கூறி அனுப்புகிறார்.
45
Yuvan Mayilsamy Entry in New Serial
தற்போது ஹாசினி மன்னிப்பு கேட்கும் சரியான நேரத்தை எதிர்பார்த்து, ராமசாமி வீட்டில் ஒரு வேலைக்காரியாக இருக்கும் நிலையில்... ஹாசினி மானிப்பாய் பெருகிறாரா? இல்லையா என்பதே இந்த சீரியலில் கதைக்களம். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் யுவன் மயில்சாமி... அதிரடியாக தற்போது விஜய் டிவியில் மற்றொரு சீரியலில் நடிக்க உள்ளார்.
அது வேற எந்த தொடரும் இல்லை... டாப் 10 TRP-யில் அவ்வப்போது தலைகாட்டி செல்லும் 'ஆஹா கல்யாணம்' சீரியலில் தான். கிரிஷ் என்கிற ரோலில் யுவன் மயில்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கேமியோ ரோலில் நடிக்கிறாரா? அல்லது நீண்ட ஒரு ரோலில் நடிக்க உள்ளாரா? என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.