MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜயகாந்த் மகன் திருமணம் நிறுத்தப்பட்டது ஏன்? விஜய பிரபாகரன் கல்யாணம் எப்போது வெளியான தகவல்!

விஜயகாந்த் மகன் திருமணம் நிறுத்தப்பட்டது ஏன்? விஜய பிரபாகரன் கல்யாணம் எப்போது வெளியான தகவல்!

நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் திருமணம் நிறுத்தப்பட்டதன் காரணம் குறித்தும், அவரின் திருமணம் எப்போது நடைபெற உள்ளது என்பது குறித்த தகவலும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 21 2024, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Captain Vijayakanth

Captain Vijayakanth

தமிழ் சினிமாவில் 80-பது மற்றும் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். கமலஹாசன், ரஜினிகாந்த், போன்ற நடிகர்களின் படங்களுக்கு நிகரான வெற்றி படங்களை கொடுத்த விஜயகாந்த்,  ரஜினிகாந்தை விட அதிகம் சம்பளம் பெறும் நடிகராகவும் இருந்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Captain Vijayakanth DMDK Party

Captain Vijayakanth DMDK Party

முன்னணி நடிகராக இருக்கும் போதே... தேமுதிக என்கிற கட்சியை துவங்கி, அதிரடியாக அரசியலுக்குள் நுழைந்தார். விஜயகாந்தின் அரசியல் உத்வேகமும், அவரின் எழுச்சியும் மக்களை மிக விரைவில் சென்றடைந்த நிலையில், அதிமுகவுக்கு எதிர்க்கட்சியாக மாறினார். தமிழகத்தை ஆளும் முதல்வராக விஜயகாந்த் வருவார் என மக்கள் நினைத்த நிலையில், இவர் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனை விஜயகாந்தை எழுந்து நிற்க முடியாமல் வீல் சேரிலேயே சுழட்டி போட்டது.

'மகாராஜா' படத்திற்காக அரும்பாடுபட்டும்... மிஸ் செய்த இளம் நடிகர்! நித்திலன் பகிர்ந்த தகவல்!

37
Vijayakanth Concentrate Political

Vijayakanth Concentrate Political

அரசியலுக்கு வந்த உடனேயே,தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துக் கொண்ட விஜயகாந்த், முழுமையாக அரசியலில் ஆர்வம் காட்டினார். விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்னர், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கட்சியை ஒரு தூண் போல் நின்று காப்பாற்றி வருகிறார்.
 

47
Vijayakanth Death

Vijayakanth Death

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விஜயகாந்த் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் உள்ள ,மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இழப்பு, தமிழ் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும்... மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது. விஜயகாந்தின்  இறுதிச் சடங்குகள், உரிய அரசு மரியாதை உடன் நடந்த நிலையில்... விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள அவருடைய அலுவலகத்திலேயே, சந்தன பேழைக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது இடத்தில் அவருக்கு நினைவிடத்தையும் கட்டி குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழக மக்களும் வழிபட்டு வருகின்றனர்.

பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி நெட்பிளிக்ஸில் மகாராஜா படைத்த மாஸ் சாதனை!
 

57
Vijayakanth Memorial

Vijayakanth Memorial

மக்கள் பலர் விஜயகாந்தை மனதில் நினைத்து, அவருடைய நினைவிடத்தில் தங்களின் கஷ்டங்களை கூறி வேண்டிக் கொண்டால் தங்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவி கிடைப்பதாகவும், உயிரோடு இருக்கும்போது பலருக்கு பசியாற்றிய விஜயகாந்தின் புண்ணிய ஆன்மா, அவரின் நினைவிடத்தில் கடவுளாக இருந்து அருள் புரிவதாக கூறி வருகின்றனர்.
 

67
vijayakanth son betrothal

vijayakanth son betrothal

விஜயகாந்தை தொடர்ந்து அவருடைய மகன் விஜய பிரபாகரனும், அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மீண்டும் இவரின் திருமண விவகாரம் பேசு பொருளாகி மாறியுள்ளது. விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகள் கீர்த்தனா என்பவருடன் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது. திருமணம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், 5 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு குடும்பத்தையே காப்பாற்றிய MGR! ஆர். சுந்தர்ராஜன் பகிர்ந்த தகவல்!

77
Vijaya Prabhakaran wedding update

Vijaya Prabhakaran wedding update

விஜயகாந்தின் உடல்நிலை அடிக்கடி மோசமாகி வந்ததால், திருமணத்தை அவருடைய குடும்பத்தினர் தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், விஜயகாந்த் இறந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில்... ஒரு வருடம் ஆன பின்னரே விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் செய்த அதே பெண்ணை தான் விஜய பிரபாகரன் திருமணம் செய்து கொள்வாரா? என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved