MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடேங்கப்பா... சம்பள விஷயத்தில் கமல்ஹாசனையே மிஞ்சிய விஜய் சேதுபதி! இத்தனை கோடி சம்பளமா?

அடேங்கப்பா... சம்பள விஷயத்தில் கமல்ஹாசனையே மிஞ்சிய விஜய் சேதுபதி! இத்தனை கோடி சம்பளமா?

Biggboss Season 8 Vijay Sethupathi Salary: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக மாறியுள்ள விஜய் சேதுபதி, இந்த நிகழ்ச்சிக்கு வாங்க உள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசனையே சம்பள விஷயத்தில் பீட் செய்துவிட்டார் மக்கள் செல்வன். 

4 Min read
manimegalai a
Published : Sep 13 2024, 06:26 PM IST| Updated : Sep 13 2024, 06:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Biggboss Anchor Kamalhaasan

Biggboss Anchor Kamalhaasan

ஹிந்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழிலும் கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாதது. சிலர் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டங்களில் குதித்த நிலையில், தன்னுடைய வார்த்தை ஜாலத்தின் மூலம் அணைத்து பிரச்சனைகளுக்கும் முற்று புள்ளி வைத்தார் உலக நாயகன் கமல்ஹாசன். 

முதல் சீசனில் ஓவியா - ஆரவ் காதல், ஜூலியின் பொய்கள், காயத்ரி ரகுராம் பூஸ்ட் பாட்டிலுக்காக பொய் சொன்னதாக எழுந்த சர்ச்சை, சேரி என்கிற வார்த்தையை விட்டு சிக்கியது என பல சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றியது. மேலும் அணைத்து போட்டியாளர்களும் மிகவும் எதார்த்தமாக விளையாடியதால்... பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2017ம் ஆண்டு ஒளிபரப்பான முதல் சீசனில் ஆரவ்  டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

29
Rithika Won title:

Rithika Won title:

இதை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் பலர் தங்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டாமல் பொய்யாக விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்தது. இதில் நடிகை ரித்திகா பிக்பாஸ் டைட்டிலை வென்றார். அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முதலில் டைட்டில் வென்ற பெண் போட்டியாளர் என்கிற அங்கீகாரத்தையும் ரித்திகா பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கும் என காத்துக்கொண்டிருந்தவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.. ஏனோ இவரால் திரையுலகில் மட்டும் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீக்ரெட்; புதிய ஆங்கர் விஜய் சேதுபதி குறித்து மாயா சொன்னது என்ன தெரியுமா? - வீடியோ
 

39
Biggboss Season 3 Title winner Muken

Biggboss Season 3 Title winner Muken

இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி,  2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த சீசனில் வனிதா போன்ற சர்ச்சைக்கு பஞ்சமில்லாத பிரபலங்கள் களமிறங்கினர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி துவங்கியதுமே. அதுவும் இரண்டே நாட்களில் கவினை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அபிராமி வெங்கடாச்சலம். ஆனால் கவின் இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், கவின் சாக்ஷியை காதலிப்பது போல் நடந்து கொண்டாலும், லாஸ்லியாவை உருகி உருகி காதலித்து பின்னர்... லாஸ்லியா குடும்பத்தினர் முன்பு தலை குனிந்து நின்றது எல்லாம் வேற லெவல் சம்பவமாக இருந்தது. லாஸ்லியா ஃபைனலுக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக... பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 5 லட்சம் ரூபாயுடன் வெளியேறிய கவின் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக உள்ளார். மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகேன் ராவ் டைட்டில் வின்னராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

49
Biggboss season 4 Title Winner Aari

Biggboss season 4 Title Winner Aari

இதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் அரசியல் வாடை கொஞ்சம் அதிகமாகவே வீசியது. சிலர் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் மேடையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்துகிறாரா? என்கிற கேள்விகளை முன்வைத்து வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த சீசன் எந்த ஒரு காதல் சர்ச்சையும் இல்லாமல்... கூலாக சென்ற நிலையில்,  நான்காவது சீசனில், ஆரி பல சவால்களை கடந்து டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றார்.

20 முறை ரிஜெக்ஷன்... விஜயகாந்த் படத்திற்கு ஒரே நாள் இரவில் இளையராஜா கம்போஸ் செய்த ஹிட் பாடல்!
 

59
Biggboss Season 5 Title winner Raju

Biggboss Season 5 Title winner Raju

பின்னர் கமல்ஹாசன் 2021ல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இந்த பிக்பாஸ் சீசனில் தான் சீரியல் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர் காதல் மலர்ந்தது. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போதே... பாவனி அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஏற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

69
Biggboss 6 title winner Azeem

Biggboss 6 title winner Azeem

இதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்... விக்ரமன் டைட்டில் வின்னராக மாறுவார் என பலரும் எதிர்பார்த்த நேரத்தில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் பேரதிர்ச்சி என்றே கூறலாம். இந்த சீசனில் டைட்டில் வின்னராக மாறிய அசீம் இதுவரை ஒரு படங்களில் கூட நடிக்கவில்லை. அதே போல் தனலட்சுமி பல விமர்சனங்களுக்கு ஆளான போட்டியாளராக இருந்தார். இவரை பற்றிய சில சர்ச்சைகள் அதிகம் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது.

2-வது படத்திலேயே அட்ஜெஸ்ட்மெட் டார்ச்சர்; இயக்குனர் மானத்தை வாங்கிய கஸ்தூரி - பின் நடந்த விபரீதம்!
 

79
Biggboss season 7 Title winner Archana

Biggboss season 7 Title winner Archana

இதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு... அதாவது கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் சில போட்டியாளர்கள் தனித்துவமான ஸ்டாட்டர்ஜி எல்லாம் பயன் படுத்தி விளையாடினார்கள். அதே போல் ஐஷு மற்றும் நிக்சன் காதல், ரவீனா மற்றும் மணி காதல் அதிகம் பேசப்பட்டது. மூத்த நடிகை விசித்ரா 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்து, மற்ற இளம் போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுத்து விளையாடினார். அதே போல், பிரதீப் ஆண்டனிக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாயா, ஐஷு, பூணிமா, நிக்சன், போன்ற சிலர் வேண்டும் என்றே... பிரதீப் ஆண்டனியை டார்கெட் செய்து வெளியேற்றியதாக கூறப்பட்டது. அதே நேரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 26-ஆவது நாளில், வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்து, விளையாடிய அர்ச்சனா, பிரதீப் ஆண்டனி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அபாண்டமானது என்பது, குறிப்பிட்டு கூறியே ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளராக மாறினார். டைட்டில் பட்டத்தையும் தட்டி சென்றார் அர்ச்சனா. 

89
Kamalhaasan red Card Issue

Kamalhaasan red Card Issue

கடந்த ஏழு சீசனாக ஒரு தொகுப்பாளராக தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்த கமல்ஹாசன்.. 8 ஆவது சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என தெரிவித்தார். படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் பிக் பாஸில் இருந்து விலகுவதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாலும், கடந்த சீசனில் அவர் எடுத்த முடிவுகள் கடும் விமர்சனங்கள் எழுந்ததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கமல் விலகுவதாக அறிவித்த பின்னர், ஒரு சிறந்த தொகுப்பாளராக யார்? அவருடைய இடத்தை நிரப்புவார் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் நிலவிய நிலையில்... விஜய் டிவி தரப்பு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தான் கமல்ஹாசனுக்கு பதிலாக தேர்வு செய்துள்ளது.

120 கோடி பட்ஜெட்.. ராயன் வெற்றிக்கு பின் தனுஷ் இயக்கும் பிரம்மாண்ட படம் - ஹீரோ இவரா?
 

99
Biggboss season 8 Anchor Vijay sethupathi

Biggboss season 8 Anchor Vijay sethupathi

விஜய் சேதுபதி சிறந்த தேர்வு என ரசிகர்களும் கூறி வந்த நிலையில், இவரது புரோமோவும் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மூன்று மாதத்திற்கு சேர்த்து எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு மாதத்திற்கு 20 கோடி என மொத்தம் 60 கோடி வழங்கப்பட உள்ளதாம். இதன் மூலம் மக்கள் செல்வன்... சம்பள விஷயத்தில் கமல்ஹாசனையே மிஞ்சி விட்டதாக பார்க்கப்படுகிறது.

அதாவது கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கிய போது, இவருக்கு சம்பளமாக 40 முதல் 50 கோடி வரை மட்டுமே கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்த சீசன்களில் தான் இவருடைய சம்பள கிராஃபும் ஏறிக்கொண்டு சென்றது. அதன் படி கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக 120 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் தொகுத்து வழங்க உள்ள முதல் நிகழ்ச்சியிலேயே கமல்ஹாசனை பீட் பண்ணும் விதத்தில் ரூபாய் 60 கோடி சம்பளமாக பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)
விஜய் சேதுபதி
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved