50 வயது நடிகரை 2-வது திருமணம் செய்த 40 வயது நடிகை! வைரல் போட்டோஸ்!

Published : Nov 09, 2024, 02:51 PM IST

மலையாள சின்னத்திரை நடிகை ஒருவர், தன்னை விட 10 வயது மூத்த ஆன்மீக குருவும் நடிகருமான கிறிஸ் வேணுகோபாலைத் திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
13
50 வயது நடிகரை 2-வது திருமணம் செய்த 40 வயது நடிகை! வைரல் போட்டோஸ்!
Kris venugopal and divya sridhar

திரையுலகில் எத்தனையோ நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொள்வதாக கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் மலையாள திரையுலகில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது. மலையாள சீரியல் நடிகை ஒருவர் தன்னை விட 11 வயது மூத்த ஆன்மீக குருவை மணந்துள்ளார். இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. 

மலையாள தொலைக்காட்சி துறையில் மிகவும் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதார். தனது 18 வயது முதலே நடித்து வரும் மலையாளம் மட்டுமின்றி பல தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து பிரபலமானவர் தான் திவ்யா.

23
Kris venugopal and divya sridhar

எனினும் தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் திவ்யா. அவருக்கு தேவானந்த் என்ற மகளும் இருக்கின்றனர். இதனிடையே தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை திவ்யா கடந்த 2019-ம் ஆண்டு அவரை விட்டு பிரிந்தார். மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கிய அவர் மலையாளத்தில் பல சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது 40 வயதாகும் திவ்யா ஸ்ரீதர், 50 வயதாகும் பிரபல நடிகரான கிறிஸ் வேணுகோபாலை கடந்த வாரம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆன்மீக குரு, ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் பிரபல தொலைக்காட்சி நடிகராகவும் கிறிஸ் வேணுகோபால் இருக்கிறார். குருவாயூர் கோயிலில் ரகசியமாக நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திவ்யாவின் குழந்தைகளும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

33
Kris venugopal and divya sridhar

திவ்யா - கிறிஸ் ஜோடி முதன்முதலில் பத்திரமட்டு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் செட்களில் சந்தித்தனர். படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. விரைவில் இது அடுத்த கட்டத்தை எடுத்தது. அவர்களின் நட்பு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 30-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.குருவாயூர் கோவிலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திவ்யா - கிறிஸ் வேணுகோபால் திருமணம் தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருப்பதால் இந்த திருமணத்தை இணையத்தில் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் இது என்ன அறுபதாம் திருமணமா என்றும் கிண்டல் செய்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த திவ்யா, செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கையா? எனது வயது குறித்து கிண்டல் செய்பவர்கள் செய்யட்டும், என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தந்தை கிடைத்திருக்கிறார்.” என்று சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

click me!

Recommended Stories