அக்காவுக்கு கேக் ஊட்டிவிடும் அருண் விஜய்! அனிதா விஜயகுமாரின் பேமிலி போட்டோஸ்!
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Anitha Vijayakumar Latest Photos
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். அவரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவிற்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என 3 பிள்ளைகள் உள்ளனர். பின்னர் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு னிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள் இருக்கின்றனர்.
Anitha Vijayakumar Latest Photos
விஜயகுமாரின் பிள்ளைகளில் அனைவருமே சினிமாவில் நடித்தவர்கள் தான். கவிதா விஜயகுமார் கூட கூலி என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். கருத்தம்மா படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது அவரின் அம்மா சம்மதிக்கவில்லை என்பதால் அந்த படத்தில் நடிக்கவில்லை
Anitha Vijayakumar Latest Photos
மருத்துவரான அனிதா விஜயகுமார் கோகுல் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு மருத்துவர் தான். பின்னர் தனது கணவருடன் கத்தார் நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் தான் தியாவுக்கு திலன் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இந்த திருமண விழா தொடர்பான பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
Anitha Vijayakumar Latest Photos
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது போட்டோக்கள், தனது மகளின் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். ஒரு மருத்துவர் என்பதால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்கள் மற்றும் டிப்ஸ்களை வழங்கி வருகிறார். அவ்வப்போது குழந்தை வளர்ப்பு முறை குறித்து பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார்.
Anitha Vijayakumar Latest Photos
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோக்களை அவர் பதிவிட்டுள்ளார். தனது தந்தை விஜயகுமார், தாய் முத்துக்கண்ணு, மகள், மருமகன், மகன், தனது தம்பி அருண் விஜய் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
Anitha Vijayakumar Latest Photos
மேலும் அவரின் பதிவில் “ எனது மகிழ்ச்சிக்கு எனது மிகப்பெரிய ஆதரவாகவும் காரணமாகவும் இருக்கும் அன்புக்குரியவர்களை எப்போதும் கொண்டிருப்பதில் நான் எப்போதும் பெருமைப்படுகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.