அதுமட்டுமல்ல "வாழு வாழ விடு" என்கின்ற வசனத்தோடு அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் தனுஷை எதிர்த்து ஒரு பதிவினை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது உள்ள வன்மத்தின் காரணமாகத் தான் இப்படி ஒரு நோட்டீசை, அதுவும் சுமார் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக நயன்தாரா குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் நயன்தாரா முன்வைத்த அனைத்து கேள்விகளுக்கும் தனுஷ் தரப்பில் இருந்து விரைவில் பதில் கிடைக்கும் என்று அவருடைய (தனுஷ்) வக்கீல் ஒரு அறிக்கையை இப்பொது வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் நயன்தாராவின் பதிவினை லைக் செய்ததன் மூலம் பல முன்னணி நடிகைகள் சிலர் நயன்தாராவிற்கு ஆதரவாகவும், இந்த விஷயத்தில் தனுஷுக்கு எதிராகவும் குரல் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.