இந்த பாடலை எழுதும் போது தமிழில் உள்ள 'ல'கர வரிசையில் பல சொற்கள் அமைக்கப்பட்ட நிலையில், இதை நிச்சயம் சுசீலாவால் மட்டுமே பாட முடியும், ஆகையால் அவருடைய டேட் கிடைக்காவிட்டாலும், காத்திருந்து அவரை இந்த பாடலுக்கு பாட வைக்க வேண்டும் என்று ரகுமானிடம் அடம் பிடித்திருக்கிறார் வைரமுத்து. அப்பாடலின் வரிகளை கேட்ட பிறகு, மெட்டை அமைத்த பிறகு, நிச்சயம் இந்த பாடலுக்கு சுசீலா தான் பாட வேண்டும் என்று ஏ.ஆர் ரகுமானும் முடிவெடுத்துள்ளார். அப்படி பலர் அடம்பிடித்து சுசீலா குரலில் ஒலித்த பாடல் தான் கண்ணனுக்கு மையழகு, கவிதைக்கு பொய்யழகு, அவரைக்கு பூவழகு, அவருக்கு நான் அழகு என்ற பாடல்.
ரம்யா பாண்டியன் வெட்டிங் ரிசப்ஷனில் ஒன்று திரண்ட பிக்பாஸ் பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!