அவ்ளோ தான் கங்குவாவுக்கு சோலி முடிஞ்சது; மளமளவென குறைந்த வசூல்!

First Published | Nov 17, 2024, 12:47 PM IST

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை திஷா பதானி நடிப்பில் வெளிவந்த கங்குவா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Kanguva

நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கங்குவா. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் சூர்யா. இதில் சூர்யா நடித்த பிரான்சிஸ் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். அதேபோல் கங்குவா கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு படத்தில் ஜோடி இல்லை. இப்படத்தில் இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி படமாக கங்குவா உருவாகி உள்ளது.

Kanguva Suriya

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதேபோல் படத்தொகுப்பு பணிகளை வெற்றி மேற்கொண்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் மிக பிரம்மாண்டமாக கடந்த நவம்பர் 14-ந் தேதி திரைக்கு வந்தது. கங்குவா திரைப்படம் உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆன முதல் காட்சியில் இருந்து நெகடிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவத் தொடங்கியது.

இதையும் படியுங்கள்... கங்குவா படத்தில் குறைகள் இருக்கு; எனக்கும் இது ஒர்க் ஆகல! ஜோதிகா ஓபன் ரிவ்யூ

Tap to resize

Kanguva Collection

குறிப்பாக படத்தின் முதல் அரைமணிநேரமும், சவுண்டும் அதிகளவில் இருப்பதாக பெரும்பாலானோர் விமர்சித்தனர். ஆனால் சிலர் படமே சரியில்லை என சரமாரியாக விமர்சித்ததோடு, நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினரை கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். இதனால் படத்தின் வசூலும் பயங்கரமாக அடிவாங்கி உள்ளது. முதல் நாளில் உலகளவில் ரூ.56 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் 33 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Kanguva Day 3 Box office

இப்படி முதல் இரண்டு நாட்களில் ரூ.89 கோடி வசூலித்திருந்த இப்படத்தின் வசூல் மூன்றாம் நாளிலும் சரிவை சந்தித்து உள்ளது. அதன்படி கங்குவா திரைப்படம் 3-ம் நாளில் 15 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் உலகளவில் 100 கோடி வசூலை கங்குவா திரைப்படம் 3 நாட்களில் கடந்துள்ளது. இருப்பினும் படத்தின் வசூல் நாளுக்கு நாள் சரிந்து வருவதால், இப்படம் அடுத்த வார இறுதி வரை தாக்குபிடிக்குமா என்பதே கேள்விக்குறி ஆகி உள்ளது. சூர்யா கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக கங்குவா இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 2014ல் நடந்தது அப்படியே நடக்குதே.. தமிழ் சினிமாவை துரத்தும் ‘பிளாப்’ செண்டிமெண்ட்!

Latest Videos

click me!