தமிழ் திரையுலகில் இப்போது கங்குவா திரைப்படத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டு வருவது தான் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்டிருக்கும் மோதல். விரைவில் Netflix தளத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் கதை ஒரு எபிசோடாக வெளியாக உள்ள நிலையில், அதில் தனுஷ் தயாரிப்பில் உருவான "நானும் ரௌடி தான்" திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை பயன்படுத்த சுமார் 10 கோடி ரூபாய் தனுஷ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாகவும், அது மட்டுமல்லாமல் நயன்தாராவிற்கு அது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.
இதனை அடுத்து நேற்று முன்தினம் நயன்தாரா, நடிகர் தனுசை வசை பாடி ஒரு மிகப்பெரிய பதிவினை வெளியிட்டார். அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் "வாழு வாழ விடு" என்கின்ற தலைப்பில் தனுஷை எதிர்த்து சில பதிவுகளை போட்டு இருந்தார். இந்த சூழலில் நயன்தாராவுக்கு ஆதரவாக ஐஸ்வர்யா ராஜேஷ், அனுப்பமா, ஸ்ருதிஹாசன் மற்றும் நஸ்ரியா நசீர் உள்ளிட்ட நடிகைகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
குஷ்பு, ஹன்சிகாவிற்கு மட்டுமில்ல சமந்தாவுக்கும் கோயில் இருக்கு; எங்க இருக்கு, யார் கட்டியது?