1000 கோடி வசூல் அள்ளிய ஒரே தமிழன்; இதுவரை பிளாப் படமே கொடுக்காத இந்த பிரபலம் யார் தெரியுமா?
கோலிவுட்டில் இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் கொடுத்து பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.1000 கோடி வசூல் அள்ளிய இயக்குனர் பற்றி பார்க்கலாம்.
Zero Flop Director Childhood Photo
சினிமாவில் குருவை மிஞ்சிய சிஷியர்கள் வெகு சிலரே, அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்த இயக்குனர் ஒருவர் தான் இயக்கிய அனைத்து படங்களையும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை ருசித்துள்ளன. அதுமட்டுமின்றி விஜய்யை வைத்தே ஹாட்ரிக் ஹிட் கொடுத்த ஒரே இயக்குனர் என்கிற பெருமையை பெற்ற இவர், பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.1000 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை படைத்துள்ளது. அந்த ஜீரோ பிளாப் இயக்குனரின் குழந்தைப் பருவ புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Atlee wife Priya
அந்த இயக்குனர் வேறுயாருமில்லை அட்லீ தான். இவரது இயற்பெயர் அருண்குமார். இவர் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு தன்னுடைய 25 வயதிலேயே சென்னைக்கு வந்து இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்த அட்லீ. அதன்பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அவர் முதன்முதலில் இயக்கிய படம் ராஜா ராணி.
Atlee, vijay
திருமணத்திற்கு பின் உள்ள காதல் வாழ்க்கையை மிக அழகாக காட்சிப்படுத்தி இருந்தார் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை ருசித்த அட்லீக்கு, அடுத்த படத்திலேயே தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என அழைக்கப்படும் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லீ. விஜய்யை வைத்து முதன்முதலாக அட்லீ இயக்கிய படம் தெறி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்தது.
Atlee Shah Rukh Khan
தெறி படத்தின் ரிசல்டால் அட்லீ மீது இம்பிரஸ் ஆன விஜய், அவருக்கு தன்னுடைய மெர்சல் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். அப்படமும் விஜய்யின் கெரியரில் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு செய்தது. பின்னர் இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் பிகில், அப்படத்தையும் வெற்றியடையச் செய்து ஹாட்ரிக் ஹிட் காம்போவாக உருவெடுத்தது விஜய் - அட்லீ கூட்டணி. இதில் பிகில் படம் நடிகர் விஜய்யின் கெரியரில் முதல் 300 கோடி வசூல் ஈட்டிய படமாக இருந்தது.
இதையும் படியுங்கள்... என்னோட படமாக இருந்தாலும் சரி, படம் நல்லா இல்லனா ஹிட் ஆக்காதீங்க – சூர்யா ஓபன் டாக்!
Priya, Atlee
இப்படி தமிழ் சினிமாவில் நான்கு ஹிட் படங்களை கொடுத்தாலும் அட்லீயின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர் கதையை திருடி எடுக்கிறார் என்பது தான். அதன்படி மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தின் காப்பி தான் ராஜா ராணி என்று விமர்சித்த நெட்டிசன்கள், தெறி விஜயகாந்தின் சத்ரியன் படத்தை தழுவி இருப்பதாகவும், மெர்சல் அபூர்வ சகோதரர்கள் மற்றும் மூன்று முகம் படத்தின் காப்பி என்றும், பிகில் சக்தே இந்தியா படத்தின் காப்பி என்றும் ஒப்பிட்டு அட்லீயை ட்ரோல் செய்தனர்.
Jawan Duo Atlee Shah Rukh Khan
இப்படி அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதற்கு தன்னுடைய வளர்ச்சியால் பதிலடி கொடுத்து வருகிறார் அட்லீ. கோலிவுட்டில் கோலோச்சிய அட்லீக்கு பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதுவும் ஷாருக்கான் படத்தை இயக்க சான்ஸ் கிடைத்தது. அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற தரமான ஹிட் படத்தை கொடுத்து பாலிவுட்டையே வாயடைக்க செய்தார். இன்று பாலிவுட்டில் செம டிமாண்ட் உள்ள இயக்குனராகவும் அட்லீ இருக்கிறார்.
Atlee, keerthi suresh, Priya
பாலிவுட்டில் அவர் இயக்கிய முதல் படமே ரூ.1000 கோடி வசூலித்ததால், தன் சம்பளத்தையும் மளமளவென உயர்த்திய அட்லீ, தற்போது ஒரு படத்துக்கு ரூ.60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ள அட்லீ தயாரிப்பில் தற்போது பேபி ஜான் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இது தெறி படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அட்லீக்கு கடந்த 2014-ம் ஆண்டே திருமணம் முடிந்துவிட்டது. அவர் தன் நீண்ட நாள் காதலியான பிரியாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு திருமணமான 9 ஆண்டுகள் கழித்து தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என பெயரிட்டுள்ளார் அட்லீ.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோ; ஏன் அமரனில் காமெடி சீன் வைக்கல? இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!