பெண்ணே! மார்பகம் பெருசா இல்லனு பீல் பண்றீயா? இத படிச்சா இனி நினைச்சு கூட பாக்கமாட்ட!

By Asianet Tamil  |  First Published Aug 9, 2024, 8:30 PM IST

Big Size Boobs Problems : பல பெண்கள் தங்களுக்கு பெரிய மார்பகங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், மார்பக அளவு பெரிதாக இருந்தால் அதனால் வரும் பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமா?


திருப்பாலான பெண்கள் தங்களுக்கு தங்களது மார்பகங்கள் பெரிதாகவும், பார்ப்பதற்கு கவர்ச்சியாகபும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மேலும் ஆண்களும் இதனால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் உங்களுக்கு தெரியுமா? 

பெரும்பாலான பெண்கள் தங்களது மார்பக அளவு பெரிதாக இருப்பதை குறித்து அதிருப்தியாக இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  ஆனால், நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களது மார்பகங்கள் சிறியதாக இருந்தால், நீங்கள் அதனால் அதிருப்தி அடைந்தால் பெரிய மார்பகங்கள் உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா? 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க:  மார்பக அயர்னிங் என்றால் என்ன? ஆப்பிரிக்கப் பெண்களை வதைக்கும் பழக்கத்திற்குக் காரணம் என்ன?

மேலும் நீங்கள் உங்களது மார்பக அளவை அதிகரிக்க விரும்பினால், அதற்கு முன், பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் என்ன மாதிரியான உடல்நிலை பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அவற்றை குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: Breast Shape: மார்பகங்கள் எடுப்பா அழகா தெரிய என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

பெரிய மார்பகங்களால் வரும் பிரச்சனைகள்:

1. முதுகு வலி:
பெரிய மார்பகங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் துணையை மகிழ்விப்பதாகவும் இருந்தாலும், அது உங்களுக்கு முதுகுத்தண்டில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். தாங்க முடியாத முதுகுவலியை அனுபவிப்பீர்கள்.

2. தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சினை:
ஆய்வு ஒன்றில், பெரிய முளைக்காம்புகளின் அளவு சில சமயங்களில் குழந்தைகளுக்கு பால் குடிப்பதில் தடையாக இருக்கும். அதுவும் குறிப்பாக புதிதாக பிறந்த குழந்தைக்கு தான். இதனால் குழந்தை தாய்ப்பால் குடிக்காததால், அது பெண்ணின் மார்பில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

3. உடற்பயிற்சி செய்யும் போது வலி:
உங்களுக்கு பெரிய மார்பகங்கள் இருந்தால் உடற்பயிற்சி செய்வது சற்று கடினமாக இருக்கும். ஜம்பிங் போன்ற அதிக தீவிரம் கொண்ட பயிற்சிகளை நீங்கள் செய்யும் போது மார்பக திசுக்கள் உடையும். உங்களுக்கு தெரியுமா.. பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் செய்ய முடியாத பல உடற்பயிற்சிகள் உள்ளன.

4. சருமத்தில் தொற்று:
பெரிய மார்பகங்களை கொண்டிருக்கும் பெண்களுக்கு அவர்களது மார்பகத்தின் கீழ் பகுதியில் தடிப்புகள் தானாகவே உருவாகிவிடும் காரணம் மார்பின் கீழ் வியர்வை தங்குவதால். இது பூஞ்சைத் தொற்றுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யும்.

5. கைகள் மரத்து போவது:
பெரிய மார்பகங்களைக் கொண்ட பல பெண்களுக்கு அக்குளைச் சுற்றி உணர்வின்மை பிரச்சனை ஏற்படும். ஆய்வு ஒன்றின் படி, பெரிய மார்பகங்களை கொண்ட பெண்களின் முளைக்காம்புகளில் உணர்வின்மை ஏற்படுகிறது. 

எனவே அடுத்த முறை நீங்கள் உங்களது மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த பிரச்சனைகள் வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!