Starbucksல் ரூ. 9.4 லட்சத்திற்கு coffee ஆர்டர் செய்த வாடிக்கையாளரைக் கொண்டாடும் Zomato!

By Dinesh TG  |  First Published Aug 9, 2024, 4:44 PM IST

காலையில் காஃபி இல்லை என்றால் பலருக்கும் தூக்கமே விடியாது. இங்கு ஒருவர் ஸ்டார்பக்ஸ்லிருந்து 9.4 லட்சம் ரூபாய்க்கு காஃபி வாங்கி குடித்து வந்துள்ளார். அந்த வாடிகையாளரை Zomato மற்றும் Starbucks கொண்டாடும் விதமாக ஒரு சிறப்பு கானொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 


Bed Coffee இல்லாமல் பலருக்கு காலைவேலை விடிவதே இல்லை எனலாம். காலையில் காஃபியுன் ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என பலர் இன்னும் நினைக்கின்றனர். வேலைப்பொழுதுகளில் ஒரு நல்ல காப்பிக்காக 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை செலவழித்து நிம்மதியாக காப்பி அருந்துவோரும் உள்ளனர். இங்கே, மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் 9.4 லட்சம் ரூபாய் செலவழித்து காஃபி மீதான காதலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்றால் அது மிகையாகாது. மிஷ்குவார் என்ற பெண் Zomato வழியாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 9 லட்சத்திற்கும் அதிகமான காஃபியை ஆர்டர் செய்துள்ளார்.

அந்த வாடிக்கையாளரை கொண்டாடும் விதமாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மற்றும் ஜொமாடோ நிறுவனம் இணைந்து ஒரு கானொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பிராண்டின் விளம்பரப் படத்தின் தொடக்கத்தில் மிஷ்குவாட்டின் மிகவும் கோபமான தாயார், உள்ளூரில் உள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அட்டையுடன் வருகிறார் அதில், மிஷ்குவாட் 9.4 லட்சம் செலவழித்து காஃபி ஆர்டர் செய்ததாக எழுதப்பட்டுள்ளது. இது என்னவென்று கேட்கும் மிஷ்குவாடின் தாயார் தனது பணத்தை திரும்பக் கோருகிறார். அப்போதுதான் கடையின் மேலாளர் தலையிட்டு இதுவரையில் நீங்கள் காஃபிக்காக எங்களுக்காக செலவழித்தது என்கிறார்.

Tap to resize

Latest Videos

அப்போது, ‘மிஷ்குவாட் ஸ்பெஷல்’ என்று ஒரு காபியை கொடுத்து அவர்களது மனதை கவர்கிறார். இந்த தொடர்பு மிஷ்குவாட்டுக்கும் அவளுக்கும் பிடித்த காபி ஷாப் இடையே உள்ள பிணைப்பை வெளிப்படுத்துகிறது. அவர்களின் காபி பயணத்தில் Zomatoவின் பங்கை வலியுறுத்துகிறது. மிஷ்குவாட்டின் வீட்டிற்கு அடிக்கடி காபி கொண்டு செல்லும் டெலிவரி பார்ட்னர், காபி அனுபவத்தில் டெலிவரி சேவைகளின் ஒருங்கிணைந்த பகுதியை விளக்கி, கதை மேலும் அழகாக்குகிறார்.

இந்தியாவுக்கே கரண்ட் தர தயாராகும் ரிலையன்ஸ்! ஜாம் நகரில் அமைகிறது முதல் சோலார் கிராமம்!

பிராண்ட் விளம்பரங்களில் வாடிக்கையாளர்கள்!

Zomato இன் CEO தீபிந்தர் கோயல், பிராண்டின் சந்தை நகர்வுகளை முடிவெடுப்பதில் கவனமாக இருக்கிறார். பிராண்ட் விளம்பரங்களில் வாடிக்கையாளரை பயன்படுத்துகிறார். இதன் மூலம் நுகர்வோர் மத்தியில் சமூக உணர்வை வளர்க்கிறது மற்றும் அவர்கள் மதிப்புமிக்கவர்களாக உயர்த்துகிறார்.

78 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் தொடரும் நிறுவனங்களின் தற்போதைய நிலை!
 

click me!