
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதே சமயம் உடல் ஒல்லியாக இருப்பதால் பலரும் கவலைப்படுகின்றனர். அப்படி நீங்களும் ஒல்லியாக இருக்கிறோம் என்று கவலைப்படுகிறீர்களா.. உங்கள் எடையை அதிகரிக்க எல்லா வகையான முயற்சிகளை செய்தும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லையா.. உங்களது நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறதா..
இதனால் நீங்கள் கடைகளில் கிடைக்கும் சப்ளிமென்ட்களை வாங்கி சாப்பிடுகிறீர்களா? ஆனால் இது உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா? இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால் இயற்கை முறைகளை முயற்சி செய்யலாம். ஆம், பாலுடன் சில பொருட்களை கலந்து ஸ்மூத்தியாக குடித்தால் உங்கள் எடைவேகமாக அதிகரிக்கும். இதனுடன் தசைகளும் வலுவடையும். இப்போது அது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: உடல் எடையையும் தசையையும் ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பதற்கான வழிகாட்டி..!
உடல் எடை அதிகரிக்க இந்த பானத்தை குடியுங்கள்:
தேவையான பொருட்கள்:
பதாம் - 2
பேரிச்சம் பழம் - 2
முந்திரி - 2
வாழைப்பழம் - 1
பால் - தேவையான அளவு
இதையும் படிங்க: உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கிறார்கள் என்று கவலையா..? இந்த சூப்பர்ஃபுட்களைக் கொடுங்க...
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக பால் ஊற்றி அதில் எடுத்து வைத்த பாதாம் பேரிச்சபழம் முந்திரி ஆகியவற்றை ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்கவும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து இவற்றை மிக்ஸி போடவும். இதனுடன் வாழைப்பழம் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைக்கவும். அவ்வளவுதான் எடை அதிகரிக்கும் பானம் தயார்.
இந்த பானத்தை குடிக்கும் முறை:
உங்கள் எடையை வேகமாக அதிகரிக்க விரும்பினால் நீங்கள் தினமும் காலை அல்லது இரவு உணவோடு ஒரு கிளாஸ் குடிக்கவும்.
இதன் நன்மைகள்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.