நம் கை விரல் நகங்களில் வெள்ளை கோடு இருந்தால் அதிர்ஷ்டம் வரும்னு சொல்றது உண்மையா?

By Kalai Selvi  |  First Published Aug 8, 2024, 4:30 PM IST

 white lines in nails : உங்களுடைய கை விரல்களில் வெள்ளை கோடு அல்லது புள்ளிகள் வருவது அதிர்ஷ்டம் என்று சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். அது எந்தளவுக்கு உண்மை, அதிர்ஷ்டத்தை காட்டுவதற்கு தான் அந்த புள்ளிகள் தோன்றுகின்றனவா என்பதை இங்கு காணலாம். 


ஆன்மீகத்தில் ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு. காகங்கள் கரைவது தொடங்கி பீரோவை எங்கு வைப்பது வரை எல்லாவற்றுக்கும் ஜோதிடத்தில் காரணங்களும், தீர்வும் உண்டு. அந்த வகையில் நகங்களில் உள்ள கோடுகளுக்கும் காரணம் இருப்பதாக மக்களில் சிலர் சொல்வார்கள். 

நகங்களில் வெள்ளை கோடு வந்தால் அதனால் அதிர்ஷ்டம் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. புதிய ஆடைகள் கிடைக்கும் என்று சிலர் சொல்வார்கள். சிலர் காசு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவாம். நம்முடைய நகங்கள் நம் உடல்நலனை காட்டும் கண்ணாடிகள். அவை எந்த நிறம், வடிவத்தில் இருக்கின்றன என்பது பொறுத்து நம்முடைய ஆரோக்கியத்தை கணிக்கலாம். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  Nail Care Tips : உங்கள் நகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க..!!

நமது தோலின் ஒரு பகுதி தான் நகங்களாகும். இவை புரோட்டின் மற்றும் கெரட்டின் ஆகியவற்றால் உருவானது. நம்முடைய உடலில் இருக்கும் பழைய செல்கள் மடிந்த பின் புதியதாக செல்கள் உருவாகி வரும். பழைய செல்கள் எல்லாமே இணைந்து கடினமான நகம் போல மாறும். இப்படி விரல் நுனிகள் வழியாக அவை வெளியேறிவிடும். 

ஆகவே உடலில் பாதிப்பு வரும் சமயத்தில், நம் உடலில் உள்ள  செல்களும் பாதிக்கப்படும். பின்னர் அதுவே நகமாக உருமாறி வெளியேறும் நேரத்தில் நம் உடலில் உள்ள பாதிப்பு அதில் வெளிப்படையாக தெரியும்.  சில நேரம் மருத்துவர்கள் நோயாளிகளுடைய விரல் நகங்களைப் பார்ப்பார்கள். அதன் மூலமாக அவர்களுடைய உடலில் எந்த மாதிரியான பாதிப்புகள் உண்டாகியுள்ளது. எப்படிப்பட்ட சோதனை செய்ய வேண்டும் என கண்டுபிடிக்க முடியுமாம்.  

இதையும் படிங்க:  Nail Care Tips: இந்த டிப்ஸ் மட்டும் ஒன் டைம் ட்ரை பண்ணி பாருங்க! உங்க நகம் பார்பதற்கு ரொம்ப அழகா இருக்கும்..!

உங்களுடைய நகங்கள் வளைந்து காணப்பட்டால் இரும்புச் சத்து குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை நகங்களில் ஏதேனும் பிளவுகள் காணப்பட்டால் அது பூஞ்சை பாதிப்பின் வெளிப்பாடு. அது ஹைப்பர் தைராய்டின் பக்கவிளைவாகவும் இருக்கலாம். உடனடியாக தோல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை செய்யுங்கள். வெள்ளை திட்டுகள் காணப்பட்டாலும் இரும்புச் சத்து குறைபாடு அல்லது பூஞ்சை பாதிப்பாக இருக்கவே வாய்ப்பாக அமையும். ஒருவேளை மஞ்சள் நிறம் என்றால் உங்களுக்கு சுவாசக் கோளாறுகள் வந்துள்ளதன் அறிகுறியாக இருக்கலாம். 

சில பெண்கள் அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துவார்கள். அடிக்கடி நெயில் பாலிஷை அகற்றுவதால் கரோட்டின் குறைந்து வெள்ளை கோடு வரலாம். புரதம் குறைபாடு, சத்து குறைபாடும் வெள்ளை கோடுகள் ஏற்பட காரணம். சிலருக்கு லுகோனிசியா (leukonychia) இருப்பதாலும் வெள்ளை கோடு ஏற்படும். அதனால் இனிமேல் நகத்தில் வெள்ளை கோடுகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். அதிர்ஷ்டம் என நம்பி ஏமாறாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!