First Date Tips : உங்கள் முதல் டேட்டிங்கில் நீங்கள் சந்திக்கும் நபரை பற்றி அறிய உங்களுக்காக சில உதவி குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பின்பற்றினால், அவருடன் உங்கள் வாழ்க்கை செலவிடலாமா வேண்டாமா? என்பதை எளிதாக தீர்மானிக்க முடியும்.
சரியான வாழ்க்கை துணையை கண்டுடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க, உங்கள் எண்ணங்கள் உங்கள் துணையிடம் பொருந்த வேண்டும். ஒருவருக்கொருவர் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் ஒருவரோடு ஒருவர் வாழ முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு நபரும் அவரை கவனித்துக் கொள்ளும் ஒரு துணையை கண்டுப்பிடிக்க விரும்புகிறார்கள். இதற்காக, பலர் டேட்டிங் செல்கிறார்கள். இதன் மூலம் ஒருவரையொருவர் சந்தித்து ஒருவரையொருவர் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் உங்கள் முதல் டேட்டிங்கில் நேர்மையாக ஒன்றை உணர்ந்தால், முன்னோக்கி செல்லுங்கள்.
அந்தவகையில், இப்போது நீங்கள் முதல் டேட்டிங் செல்லும்போது சந்திக்கும் நபர் உங்களுக்கு சரியானவரா இல்லையா? என்பதை முதல் சந்திப்பில் புரிந்து கொள்ளலாம். இதற்காக சில உதவி குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் பின்பற்றினால், இதனால் அவர்களுடன் உங்கள் வாழ்க்கையை செலவிடலாமா வேண்டாமா? என்பதை எளிதாக தீர்மானிக்க முடியும். அவை..
undefined
முதல் டேட்டிங் செல்பவர்களுக்கான சில குறிப்புகள்:
1. இப்படி உணர்ந்தால் நல்லது: அறிமுகம் இல்லாத ஒருவரை நீங்கள் முதல்முறையாக சந்திக்கும் போது அவருடன் நீங்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் உணர்ந்தால், எதிர்காலத்தில் அத்தகைய நபருடன் வாழ்வது எளிதாக இருக்கும்.
2. உடல் மொழி: பல நேரங்களில் உரையாடலில் புரியாத சில விஷயங்களை உடல் மொழி மூலம் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு முன்னால் இருப்பவரின் உடல் மொழியை புரிந்துகொள்ள, அந்த நபர் உங்களுடன் கண்தொடர்பு கொள்கிறாரா இல்லையா? அவர் உங்கள் பேச்சை கேட்பதில் ஆர்வமாக உள்ளாரா என்பதை பார்க்கவும். அப்படியானால் அவர்களுடன் உங்கள் எதிர்காலத்தை செலவிடுவது பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.
3. மற்றவர்களுடன் பழகுவது: நீங்கள் சந்திக்கும் அந்த நபர் முதல் சந்திப்பில் உங்களுடன் நன்றாக நடந்து கொள்ளலாம். ஏனென்றால், அவர் உங்களை விரும்புகிறார், ஆனால், அவர் மற்றவரிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை கவனம் செலுத்துங்கள். தன்னை சுற்றி இருப்பவர்களிடம், பணியாளர்களிடம் அல்லது அங்கு இருக்கும் சிறு குழந்தைகளிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அவனுடைய இயல்பை வெளிப்படுத்துகிறது.
4. அவரது கேள்விகள்: முதல் சந்திப்பில் இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள சில விஷயங்களை கேட்பது வழக்கம். அந்தவகையில், நீங்கள் சந்திக்கும் நபர் உங்களிடம் கேட்கும் கேள்விகளை வைத்து அவரது ஆளுமையை சுலபமாக அறிந்து கொள்ளலாம். உங்களது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி அவர் எவ்வளவு தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்பது அவர் உங்களுடன் எதிர்காலத்தில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதையும், உங்கள் வாழ்க்கையில் அவர் எவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பதையும் காட்டுகிறது.