தவறாக நடப்பது
நடந்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கு, தவறாக நடப்பதும் ஒரு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலானோர் நடக்கும்போது கால்களை முழுவதுமாக அசைப்பதில்லை. இது அதிக கலோரிகளை எரிக்காது. மேலும் எடை குறையாது. நடக்கும்போது பெரும்பாலானோர் தங்கள் போனைப் பார்ப்பார்கள். இதனால் கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஏற்படுகிறது. எனவே இப்படி செய்வதால் பலன் கிடைக்காமால் போவது ஒருபுறம் என்றால், பல உடல்நல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.
மெதுவான வேகம்
மெதுவாக நடப்பது கூட உடல் எடையை குறைக்க வாய்ப்பளிக்காது. இது கலோரிகளை எரிக்காது. மெதுவாக நடப்பதால் உடல் எடை குறையாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மெதுவாக நடந்தால் உடல் எடை குறையாது எனவே கொஞ்சம் வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.