உப்பால் உருவான நகரம்! ராஜஸ்தானில் உள்ள இயற்கை அதிசயம்!

First Published | Nov 17, 2024, 9:28 AM IST

நீங்கள் சாகசத்தை விரும்பக்கூடியவர் என்றால், ராஜஸ்தானில் உள்ள சம்பர் உங்களுக்கான இடம்தான். ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிறிய நகரத்தின் சிறப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

Jaipur, Sambhar, Rajasthan, Salt City, salt lake, Salt Train, Salt

நீங்கள் சாகசத்தை விரும்பக்கூடியவர் என்றால், ராஜஸ்தானில் உள்ள சம்பர் உங்களுக்கான இடம்தான். ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த சிறிய நகரம், அதன் வரலாறு, இயற்கை அழகு என அனைத்தும் சேர்ந்து உங்கள் மனதைக் கவர்ந்துவிடும். ராஜஸ்தானின் "உப்பு நகரம்" என்றும் அழைக்கப்படும் சம்பார், இந்தியாவின் மிகப்பெரிய உப்பு ஏரியைக் கொண்டது. பல ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்யும் முக்கிய பகுதியாக உள்ளது.

Jaipur, Sambhar, Rajasthan, Salt City, salt lake, Salt Train, Salt

சம்பாருக்குள் நுழையும்போது, ​​ஏரியின் விரிவுதான் முதலில் தெரியும். சம்பார் ஏரி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் உப்பு உற்பத்தி வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதி ஒரு காலத்தில் உள்ளூர் சவுகான் வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. இன்று, சம்பாரில் இருந்து வரும் உப்பு, இந்தியா முழுவதும் சென்றடைகிறது.

Tap to resize

Jaipur, Sambhar, Rajasthan, Salt City, salt lake, Salt Train, Salt

சம்பார் ஏரி பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுகிறது. கோடையில் வறண்டுவிடும் ஏரியில் உப்பு அடுக்குகள் வெளியே தெரியும். உள்ளூர் தொழிலாளர்கள் உப்பு சேகரிப்பதைக் காணலாம். சூரிய ஒளியில் பிரகாசிக்கும் உப்பு கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நீண்டு கிடப்பதை எளிதில் மறக்க முடியாது.

Jaipur, Sambhar, Rajasthan, Salt City, salt lake, Salt Train, Salt

சம்பாரின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, நூற்றாண்டு பழமையான உப்பு ரயில். இந்த ஷார்ட்-கேஜ் ரயில் முதலில் ஏரியில் இருந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு உப்பு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது. இன்று, உப்பு ரயில் சுற்றுலா அனுபவத்தைக் கொடுக்கிறது. சால்ட் ரயிலில் சவாரி செய்வது, காலத்தில் பின்னோக்கிச் செல்வது போன்ற உணர்வைக் கொடுக்கும். இந்தப் பகுதியில் உப்பு தயாரிக்கும் முறை பாரம்பரியமான முறையிலிருந்து பெரிய அளவில் மாறாமல் உள்ளது.

Jaipur, Sambhar, Rajasthan, Salt City, salt lake, Salt Train, Salt

சம்பார் ஏரி அதன் உப்புக்கு மட்டும் பிரபலமானது அல்ல; புலம்பெயர்ந்த பறவைகளின் புகலிடமாகவும் உள்ளது. குளிர்காலங்களில், அக்டோபர் முதல் மார்ச் வரை, ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோக்கள் மற்றும் பிற புலம்பெயர்ந்த பறவையினங்கள் வருகின்றன. இந்தப் பருவத்தில் பறவைகளை ரசிக்கும் ஆர்வலர்கள் இங்கே வருகிறார்கள். ஆழமற்ற நீரில் கூட்டம் கூட்டமாக அலைந்து திரியும் அழகிய பறவைகளைக் காணலாம்.

Jaipur, Sambhar, Rajasthan, Salt City, salt lake, Salt Train, Salt

பலவித பறவைகள் சம்பார் உப்பு ஏரிக்கு கூட்டமாக வருவதைக் காணலாம். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், பெலிகன்கள், நாரைகள் மற்றும் சாண்ட்பைப்பர்கள் ஃபிளமிங்கோக்களையும் கூட காணலாம். தொலைநோக்கி மூலம் பார்த்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் ரசிக்கலாம்.

Shakambari Sevi Temple, Sambhar

வரலாறு மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்கள் சம்பாரில் உள்ள ஷாகாம்பரி தேவி கோவிலுக்குச் செல்லலாம். இந்த பழமையான கோவில் புறநகரில் அமைந்துள்ளது. 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயில் என்று நம்பப்படுகிறது. சம்பார் ஏரியையும் அதைச் சார்ந்துள்ள மக்களையும் பாதுகாப்பது ஷாகாம்பரி தேவிதான் என்று நம்புகிறார்கள்.

Latest Videos

click me!