எந்த வயசுல 'சிகரெட்' பழக்கம் ஆரம்பிக்குது தெரியுமா? இதுக்கு பெற்றோரும் காரணமா? 

First Published | Nov 16, 2024, 5:05 PM IST

Smoking Trends By Age Group : புகைப்பிடிக்கும் பழக்கம் எந்த வயதினரிடம் அதிகம் காணப்படுகிறது? அது ஏன் என இங்கு காணலாம். 

Smoking Trends By Age Group In Tamil

புகைபிடித்தல் பழக்கத்தால் உலகம் முழுக்க பல லட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இந்த பழக்கத்தால் தனிநபர் மட்டுமின்றி சமூகத்தில் வாழும் மற்ற மக்களின் ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. இந்நிலையில் தான் யார் அதிகம் புகைப்பிடிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. வயது அடிப்படையில் இதை நோக்கினால் பல அதிர்ச்சிக்கரமான காரணங்கள் வெளிப்படுகின்றன. 

Smoking Trends By Age Group In Tamil

புகைபிடித்தல் பழக்கம் தொடர்வதால் நுரையீரல், சுவாசப்பாதைகள் கடுமையாக பாதிக்கின்றன. சிலருக்கு  சளி, நிமோனியா போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீண்டகால பழக்கம் புற்றுநோயை கூட ஏற்படுத்தும். புகை பிடிக்கும் பழக்கம் ஒருவரின் உடல் நலத்தை பாதிக்கும் என்று தெரிந்தும் கூட அவர் சிகரெட் புகைக்கிறார்.

இதற்கு அவர்கள் நேரடியாக சொல்லும் பதில்களில் ஒன்று வாழ்க்கையில் அதிருப்தியாக இருப்பது. கோபம், விரக்தி, தோல்வி உள்ளிட்ட பல உணர்வுகளால் இந்த பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். எந்த வயதில் இருப்பவர்கள் சிகரெட் அதிகம் புகைக்கிறார்கள் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos


Smoking Trends By Age Group In Tamil

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளில் சிகரெட் பழக்கத்தால் இளைஞர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. நண்பர்களுடைய தூண்டுதல் இளம்வயதினரை புகைப்பழக்கத்திற்குள் இழுத்து வருகிறது.  புகைபிடிக்கும் பழக்கம் ஸ்டைல், ஒருவர் பிரபலமாக உதவும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது.  

இதையும் படிங்க:  டீ உடன் சிகரெட் பிடிப்பீங்களா? அப்ப முதல்ல இதை படிங்க!

Smoking Trends By Age Group In Tamil

பெற்றோரும் காரணம்:

பெற்றோர் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்களோ குழந்தைகள் அவ்வளவு ஆரோக்கியமாக வளர்வார்கள். பெற்றோருக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால் குழந்தைகளும் அந்த பழக்கத்தைத் தொடரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கிடையில் இன்றைய காலகட்டத்தில் புகைப்பிடிப்பது சாதாரண வழக்கமாகி வருகிறது. சீரிஸ்,  திரைப்படங்கள், விளம்பரங்கள் புகைப்பதை ஆளுமையாக, ஸ்டைலாக காட்டுகின்றன. பெரும்பாலான இளைஞர்கள் தங்களுடைய பதட்டத்தை மறைக்க, மன அழுத்தத்தை சமாளிக்க புகைப் பிடிக்கத் தொடங்குகின்றனர். 

இதையும் படிங்க:  ஒரு நாளைக்கு 100 சிகரெட்! புகைவண்டியாக இருந்த ஷாருக்கான் டீ டோட்லராக மாறியது ஏன்?

Smoking Trends By Age Group In Tamil

எந்த வயதுக்காரர்கள் அதிக ஆபத்தில் உள்ளார்கள்?  

பதின்ம வயதுகளில் உள்ளவர்கள் தான் அதிக ஆபத்தில் உள்ளார்கள். அதாவது 15 முதல் 24 வயதுக்காரர்கள் பெரும்பாலும் புகைபிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள். இதற்கு  அவர்களுடைய வயதுக்கான அடையாளத் தேடல் ஒரு காரணம். சமூக ஊடகங்களில் உள்ள வாழ்க்கை முறையின் தாக்கம், மன அழுத்தம், பயம், த்ரில் உள்ளிட்ட பல காரணங்கள் இளைய தலைமுறையை புகைப்பிடிக்கும் பழத்திற்கு அடிமையாக்குகிறது.

click me!