
ஃப்ரிட்ஜில் கருப்பு பூஞ்சை வருவது ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் ஃப்ரிட்ஜை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது, ஒரு உணவை நீண்ட நாள் அதில் வைப்பது, உள்ளே ஈரப்பதம் இருப்பது, பிரிட்ஜ் ஸ்விட்சை அனைத்து வைத்திருப்பது இது போன்ற பல காரணங்கள் உள்ளன.
கருப்பு பூஞ்சை முக்கியமாக ஃப்ரிட்ஜில் கேஸ்கட் மற்றும் அதன் உள் பாகங்களில் தான் தெரியும். பிரிட்ஜ் அழுக்காக இருக்காக இருந்தால் நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு தான் தெரியுமா? ஃப்ரிட்ஜில் இருக்கும் கருப்பு பூஞ்சை அகற்றுவது சற்று கடினமாக இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் அதை மிக எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: ப்ரீசரில் இருந்து ஐஸ் கட்டிகளை எளிதாக நீக்கணுமா? இதோ டிப்ஸ்!
ஃப்ரிட்ஜில் இருக்கும் கருப்பு பூஞ்சையை அகற்றுவது எப்படி?
எலுமிச்சை பழம்
ஃப்ரிட்ஜில் இருக்கும் கருப்பு பூஞ்சையை சுத்தம் செய்ய எலுமிச்சை பழம் உங்களுக்கு உதவும். இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வீட்டில் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை நன்றாக சூடாக்கி பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும் 20 நிமிடம் கழித்து பிரிட்ஜை திறந்து டிஷ கிளினர் மூலம் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் இப்படி செய்தால் ஃப்ரிட்ஜில் இருக்கும் பூஞ்சையை எளிதில் அகத்திவிடலாம் மேலும் பிரிட்ஜில் துர்நாற்றம் அடிக்காது பிரிட்ஜ் முற்றிலும் சுத்தமாகவும் பார்ப்பதற்கு புதிதாகவும் இருக்கும்.
சூடான நீர் & சோப்பு
இதற்கு சூடான நீரில் பாத்திரம் கழுவும் சோப்பை நன்றாக கலக்கவும். பிறகு அந்த நீரை கொண்டு ஃப்ரிட்ஜ் உட்புறத்தை நன்றாக சுத்தம் செய்யுங்கள். இதை நீங்கள் செய்யும் போது கையுறை பயன்படுத்த மறக்காதீர்கள்.
பேக்கிங் சோடா & டிஷ் வாஷ்
பிரிட்ஜில் இருக்கும் பூஞ்சையை சுத்தம் செய்ய ஒரு வழி தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு டிஷ்வா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது பூஞ்சை மீது வினிகர் தெளித்து சுமார் 10 நிமிடம் கழித்து பேக்கிங் சோடா மற்றும் டிஷ் வாஷ் தண்ணீரை கொண்டு நன்றாக சுத்தம் செய்தால் பூஞ்சைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
கேஸ்கெட் சுத்தம் செய்ய
பிரிட்ஜ் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் ரப்பரில் அடிக்கடி அடிக்கடி பூஞ்சை வரும் எனவே அதை சுத்தம் செய்ய அதன் மீது சிறிதளவு வினிகர் தெளித்து சுமார் 10 நிமிடம் கழித்து பேக்கிங் சோடா கரைசல் கொண்டு, நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் உட்புறத்தை சுத்தம் செய்ய டூத் பிரஸ் பயன்படுத்தலாம்.
குறிப்பு : ஃப்ரிட்ஜை நீங்கள் சுத்தம் செய்வதற்கு முன் மெயின் சுவிட்சை அனைத்திற்கு வேண்டும் மற்றும் ஃப்ரிட்ஜில் உணவுப் பொருட்கள் எதுவும் வைக்கக் கூடாது.
பிரிட்ஜில் பூஞ்சை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
1. பிரிட்ஜில் பூஞ்சை வராமல் இருக்க பிரிட்ஜின் ஈரப்பதத்தை விதை படுத்தவும் மற்றும் தண்ணீர் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
2. ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுகளை திறந்து வைக்காமல் மூடி வைக்கவும். அதுபோல நீண்ட நாள் எந்த ஒரு உணவையும் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.
3. வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் அகற்றி ஃப்ரிட்ஜை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
4. ஒரு முறை பிரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்யுங்கள் இல்லையெனில் மாதம் ஒரு முறையாவது செய்யுங்கள் அப்போதுதான் பூஞ்சைகள் வளராது.
இதையும் படிங்க: ஃபிரிட்ஜில் முட்டை வைத்தால் கெட்டு போகாதுனு நினைச்சிருப்பீங்க.. அதுக்கு இப்படி ஒரு காரணம் கூட இருக்கு!!