
அசைவ விரும்பிகளில் மீனை விரும்பாதவர்கள் சொற்பம்தான். மீன் சுவையான உணவு மட்டுமல்ல; அதில் ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளன. மீன் உண்பதால் இதயம் வலுவாகும். மாரடைப்பு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் குறையும். நம் நாட்டில் காணப்படும் பல சுவையான மீன் வகைகளில் கிழங்கான் மீனும் ஒன்று. இந்த மீனில் குறிப்பிட தகுந்த பல சத்துக்கள் காணப்படுகின்றன என்பதாலே இது தனித்துவமானது. உடலுக்கு தேவையான பல்வேறு விதமான சத்துக்களை கொண்டுள்ள கிழங்கான் மீன் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கிழங்கான் மீன் வகைகள்:
கிழங்கான் மீனில் இரண்டு வகைகள் உள்ளன. நாய்க்கிழங்கான் மீன் அல்லது கருப்பு கிழங்கான் மீன் என அழைப்பார்கள். இது ஒருவகை. இன்னொரு வகை வெள்ளை கிழங்கான் மீன் ஆகும். இதில் கருப்பு கிழங்கான் மீன் தடிமனானது. இது பார்க்க கருப்பாகவும் உருண்டையாகவும் இருக்கும். கருப்பு நிறம் கலந்த இந்த மீன் 1 அடி நீளம் கொண்டது. வெள்ளை கிழங்கான் மீன் நிறத்தில் வேறுபட்டது. வெண்மை நிறத்தில் காணப்படும் இந்த மீன் 1 ஜாண் நீளத்தில் இருக்கும். இந்த வெள்ளை கிழங்கான் வறுத்தாலும், குழம்பு வைத்தாலும் சுவை அபாரமாக இருக்கும்.
இதையும் படிங்க: மீன் எல்லோருக்கும் நல்லதல்ல.. இந்த '7' மீன்களை 'கர்ப்பிணிகள்' சாப்பிடக் கூடாது!!
இந்த மீன் புரதச்சத்து அதிகம் கொண்டது. உங்களுடைய குழந்தைகளுக்கு இந்த மீனை சமைத்துக் கொடுத்தால் அவர்களுடைய வளர்ச்சிதை மாற்றம் மேம்படும். அடிக்கடி கிழங்கான் மீன் சாப்பிடும் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கோடை காலங்களில் இந்த மீனை அதிகம் சமைப்பார்கள். அதற்கு இந்த மீன் சரும பராமரிப்புக்கு தேவையான பண்புகளை கொண்டுள்ளது தான் காரணமாகும்.
கிழங்கான் மீனின் சத்துக்கள்:
உடலுக்கு தேவையான தாதுச்சத்துக்களான பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இந்த மீனில் உள்ளன. அத்தியாவசிய வைட்டமின் சத்துக்களும் மிகுந்து காணப்படுகிறது. இந்த மீனை உண்பதால் நரம்பியல் மண்டலம் நன்றாக செயல்படும்.
இதையும் படிங்க: மீன் சாப்பிடும் போது 'இந்த' உணவுகளை மட்டும் தவிர்க்கனும்!! மீறினால் சேதாரம் தான்!!
மூல நோய் குணமாகும்!
கிழங்கான் மீன் உடல் சூட்டை குறைக்கும் அற்புத மீன் வகையாகும். இதனை அடிக்கடி சாப்பிட்டால் மூல நோய் பிரச்சனைகள் நீங்கும் என்பார்கள். வாரத்தில் ஒரு தடவை கிழங்கான் மீனை உண்பவர்களுக்கு மூலம் மாதிரியான பிரச்சனைகள் வருவதன் வாய்ப்புகள் குறையும். இந்த மீன் குளிர்ச்சியை கொடுப்பவை என்பதால் அடிக்கடி உண்பது உடலை வெப்பச் சமனிலையுடன் வைத்திருக்கும்.
புற்றுநோய் கட்டுப்பாடு:
கிழங்கான் மீன் அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இந்த மீனில் உள்ள பண்புகள் புற்றுநோய் செல்கள் புதியதாக உருவாகாமல் தடுக்க உதவுகிறது.
தோல் பராமரிப்பு:
கிழங்கான் மீன் உண்பதால் சரும பிரச்சனைகள் குறையும். தோல் பராமரிப்புக்கு இந்த மீன் ஏற்றது. சருமம் தொடர்பான அரிப்பு, வறட்சி ஆகியவற்றை தடுக்க இம்மீன் உதவும். குளிர்ச்சியான இந்த மீன் சருமத்திற்கு ஈரப்பத்தை அளிக்கும். மற்ற காலங்களை விடவும் கிழங்கான் மீன் வெயில் நேரம் சாப்பிடுவது கூடுதல் நன்மையை தரும்.
இதய பிரச்சனை:
கிழங்கான் மீன்களை அடிக்கடி உண்பதால் வாதநோய்களை தடுக்க முடியும். குறிப்பாக இன்றைய சூழலில் பரவலாக காணப்படும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதயக்கோளாறுகளை தடுக்க கிழங்கான் மீன் உதவும். வாய்ப்பிருப்பவர்கள் வாரம் ஒருமுறையேனும் கிழங்கான் மீன் சாப்பிட்டு வருவது நல்லது.