MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மீன் எல்லோருக்கும் நல்லதல்ல.. இந்த '7' மீன்களை 'கர்ப்பிணிகள்' சாப்பிடக் கூடாது!! 

மீன் எல்லோருக்கும் நல்லதல்ல.. இந்த '7' மீன்களை 'கர்ப்பிணிகள்' சாப்பிடக் கூடாது!! 

Dangerous Fish For Pregnant Women : கர்ப்பிணிகள் மறந்தும் சாப்பிடக்கூடாத ஏழு மீன் வகைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 26 2024, 02:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Dangerous Fish For Pregnant Women In Tamil

Dangerous Fish For Pregnant Women In Tamil

மீனில் காணப்படும் சத்துக்கள் அற்புதமானவை. இது தசைகளை வலுவாக்கும் புரதம், இதயத்திற்கு ஏற்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் கொண்டவை. வாரம் இருமுறை மீன் சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு  தேவையான பல சத்துகள் மீனில் உள்ளன. ஆனால் இந்தியாவில் விற்கப்படும் சில மீன்கள்   கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானவை. இந்தியாவில் பரவலாக வாங்கி சமைக்கப்படும் 5 மீன்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Dangerous Fish For Pregnant Women In Tamil

Dangerous Fish For Pregnant Women In Tamil

சுறா: 

சுறா மீனில் காணப்படும் அதிக அளவு பாதரசம் உள்ளது. இந்த தனிமம் கர்ப்பிணியால் உட்கொள்ளப்படும்போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமாம். அதனால் கர்ப்பிணிகள் சுறா மீனை சாப்பிடக் கூடாது. 

வாள்மீன் (கோத்): 

சுறா எபப்டி கர்ப்பிணிக்கு ஏற்றதில்லையோ அதை போல வாள்மீனும் நல்லதல்ல. ஏனென்றால் இதிலும் அதிகளவு பாதரச தனிமம் இருப்பதாக சொல்லப்படுகிறது. கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக இந்த மீனை தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களே... மழைக்காலத்தில் இந்த மாதிரியான உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...!

35
Dangerous Fish For Pregnant Women In Tamil

Dangerous Fish For Pregnant Women In Tamil

கானாங்கெளுத்தி (அய்லா):

பாதரசம் அளவை அதிகம் கொண்டிருக்கும் மீனில் கிங் கானாங்கெளுத்தியும் அடங்கும். இது கருவுற்ற பெண்களின், கருவின் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்கிறது. 

ஷீலா மீன்:

ஷீலா மீன் என அழைக்கப்படும் பாராகுடா மீனை உண்பதும் ஆபத்து தான்.  இந்த மீனில் உள்ள பாதரசம் காரணமாக கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய மீனாகும்.

டைல்ஃபிஷ் (கோரல்): 

டைல்ஃபிஷ் என்பது கோரல் என்றும் சொல்லப்படுகிறது. கடலின் அடிமட்டத்தில் உள்ள இந்த மீன் அதிக அளவு பாதரசத்தை கொண்டுள்ளது. இதனால் கருக்கலையும் அபாயம் உள்ளது. ஆகவே  கர்ப்பிணிகளுக்கு இந்த மீன் ஏற்றதல்ல. 

இதையும் படிங்க: சுக பிரசவம் ஆகனுமா...? அப்ப கர்ப்ப காலத்தில் தினமும் காலை 'இத' மட்டும் செய்ங்க..!

45
Dangerous Fish For Pregnant Women In Tamil

Dangerous Fish For Pregnant Women In Tamil

வௌவால் மீன்: 

மார்லின் என சொல்லப்படும் வௌவால் பெரிய மீன் ஆகும். இதிலும் அதிகளவு பாதரசம் உள்ளது. இதனை உண்பதால்  கருக்கலைய கூட வாய்ப்புள்ளது.  

ரோகு: 

கெண்டை மீன் இனத்தை சேர்ந்த ரோகு மீனை கருவுற்ற பெண்கள் சாப்பிடக் கூடாது. நம் ஊரில் இது அதிகம் கிடைக்கிறது. சில ஆய்வுகளில் இந்த மீனில்  ஈயம், காட்மியம் அதிகளவு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வயிற்றில் வளரும் சிசு பாதிப்படைய வாய்ப்புள்ளது. 

இந்த மீன்களில் உள்ள பாதரச அளவானது எடை, வயது, அவை வசித்த நீர் ஆகிய காரணிகளைப் பொறுத்தது.  அதே சமயம் கர்ப்பிணிகள் மீன் சாப்பிட விரும்பினால் குறைந்த பாதரசம் அளவு உருக்கும் மீன்களை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். 

55
Dangerous Fish For Pregnant Women In Tamil

Dangerous Fish For Pregnant Women In Tamil

கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடிய மீன்கள்: 

1). நெத்திலி மீன்
2). மத்திமீன்
3). கட்லா
4). மடவை மீன்
5). பாம்ஃப்ரெட்

இந்த மீன்களில் மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது பாதரசத்தின் அளவு குறைவாக உள்ளது. இதனால் கரு வளர்ச்சிக்கு நல்லது. அதிலும் உடலுக்கு பல நன்மைகளை செய்யும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் இதில் அதிகம் காணப்படுகின்றன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved