சுக பிரசவம் ஆகனுமா...? அப்ப கர்ப்ப காலத்தில் தினமும் காலை 'இத' மட்டும் செய்ங்க..!

Pregnancy Walking Benefits  : கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

amazing health benefits of morning walk during pregnancy in tamil mks

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஒரு அழகான தருணமாகும். இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தங்களை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திப்பீர்கள்.

நிபுணர்களின் கூற்றுப்படி,கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்கவும், பல சவால்களை சமாளிக்கவும் சிறந்த வழி காலையில் 'நடைப்பயிற்சி' செய்வது தான். கர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி செய்வது, தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இன்றைய கட்டுரையில் கர்ப்ப காலத்தில் காலையில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  குழந்தை பாக்கியம் கிடைக்க சக்தி வாய்ந்த எளிய பரிகாரம்.. உடனே செய்ங்க..

கர்ப்ப காலத்தில் காலை நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

1. எடையை கட்டுப்படுத்தும்: கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது இயல்பானது. ஏனெனில் குழந்தை வளரும்போது உடல் பிரசவத்திற்கு தயாராகிறது என்பதை குறிக்கிறது.
உண்மையில், எடை அதிகரிப்பது கர்ப்ப காலத்தில் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இதனால்தான் கர்ப்ப காலத்தில் அதிக எடையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி சிறந்த வழி வலி என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். மூட்டுகளில் அதிக அழுத்தம் கொடுக்காமல், கலோரிகளில் எரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இது பெரிதும் உதவியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

2. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்: கர்ப்பம் இதய அமைப்பில் அதிகாலத்தை ஏற்படுத்தும். காரணம், வளரும் கருவுக்கு ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கடினமாக வேலை செய்வதால் தான். எனவே, கர்ப்ப காலத்தில் இதையே ஆறு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி சிறந்த வழியாகும். இதன் மூலம் இதயம் வலுவாகவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் முடியும்.

3. மன அழுத்தத்தை குறைக்கும்: கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சிகரமான காலம். எனவே, இந்த காலகட்டத்தில் மன அழுத்தத்தை நீக்க, காலை நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், நடைப்பயிற்சி பதட்டத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதன் மூலம் மன அழுத்தத்தை சுலபமாக குறைக்கலாம்.

இதையும் படிங்க: கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிடுவது உண்மையில் நல்லதா..?

4. தூக்கத்தின் தரம் மேம்படும்: கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு சரியாக தூக்கம் வராமல் இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவு  கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, தினமும் காலையில் நடைபெற்று செய்து வந்தால் தூக்கத்தின் தரம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், கர்ப்பத்திற்கு உடல் தயார்படுத்தும்.

5. பிரசவத்தை எளிதாக்கும்: முக்கியமாக கர்ப்பகாலத்தில் நடை பயிற்சி செய்து வந்தால் பிரசவத்திற்கு உடலை தயார்படுத்த பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இடுப்பு தசைகளையும் வலுவாக்குகிறது. இது தவிர பிரசவத்தை எளிதாக்குகின்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios