MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • டீ உடன் சிகரெட் பிடிப்பீங்களா? அப்ப முதல்ல இதை படிங்க!

டீ உடன் சிகரெட் பிடிப்பீங்களா? அப்ப முதல்ல இதை படிங்க!

டீயுடன் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Oct 02 2024, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
smoking cigarettes with tea side effects

smoking cigarettes with tea side effects

டீ குடித்துக் கொண்டே சிகரெட் பிடிக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. இந்தக் காம்பினேஷன் உங்க டென்ஷனையும், டயர்ட்னஸையும் குறைந்தாலும், உங்க உடல்நலத்தைக் கெடுத்துடும். டீயும் சிகரெட்டும் சேர்ந்து குடிப்பதால் மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிகரெட்டும் டீயும்

ஒரு சிகரெட்டில் 6-ல் இருந்து 12 மி.கி. நிகோடின் இருக்கிறது. சிகரெட் பிடிக்காதவர்களை காட்டிலும் சிகரெட் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வர 2-3 மடங்கு வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.. சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துட்டு போகும் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால இதயத்திற்கு சுத்தமான ரத்தம் போகாது. மாரடைப்பு வர வாய்ப்பும் அதிகமாகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
smoking cigarettes with tea side effects

smoking cigarettes with tea side effects

டீயில் பாலிபினால்கள் என்று கூறப்படும் இயற்கையான சேர்மங்கள் இருக்கு. இது இதயத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் டீயில் பால் கலப்பதால் இதோட நல்ல குணங்கள் குறைய தொடங்குகிறது. அதாவது, பாலில் இருக்கும் புரதம் டீயில இருக்கிற பாலிபினால்களோட தன்மையை குறைத்துவிடும். இதனால டீ அதிகமா குடித்தால், இதயத்துடிப்பு அதிகமாகும். ரத்த அழுத்தமும் அதிகமாகும். இந்த இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

டீ குடித்துக்கொண்டே சிகரெட் குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்.

டீ குடித்துக்கொண்டே சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வர 30 சதவீதம் வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வுல தெரிய வந்துள்ளது. டீ யில் இருக்கும் நச்சுப் பொருட்கள் சிகரெட் புகையோட சேர்ந்து புற்றுநோய் மாதிரியான ஆபத்தான நோய்களை உண்டாக்குகிறது. அதனால எந்த சூழ்நிலையிலும் டீ குடித்துக்கொண்டே சிகரெட் பிடிக்கக் கூடாது. 

35
smoking cigarettes with tea side effects

smoking cigarettes with tea side effects

புற்றுநோய் :  சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். குறிப்பாக வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம். டீ உடன் சேர்த்து சிகரெட் குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். டீ உங்கள் உடம்பில் இருக்கும் செல்களைத் தூண்டும். சிகரெட்டில் இருக்கும் நச்சுப் பொருட்கள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். 

45
smoking cigarettes with tea side effects

smoking cigarettes with tea side effects

டீ, சிகரெட் காம்பினேஷன் உங்க செரிமான அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இது உங்க உணவுக்குழாய், வயித்துல அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, அசிடிட்டி, வாயுத் தொல்லை மாதிரியான செரிமானப் பிரச்சினைகள் வரும். 

மன அழுத்தம்:  சிகரெட் பிடிப்பவர்களு சிகரெட் பிடிக்கும் போது ரிலாக்ஸா இருக்க மாதிரி இருக்கும். ஆனால் அதன்பின்னர் மன அழுத்தமும் டென்ஷனும் அதிகமாகும். டீயில் இருக்கும் கேஃபைன் காஃபைன் தூக்கமின்யை ஏற்படுத்தும். இதனால் மன ஆரோக்கியம் மேலும் மோசமாகும்.

பற்கள், வாய் ஆரோக்கியத்தில் பாதிப்பு: டீ, சிகரெட் புகையில் இருக்கும் டானின்கள் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். குறிப்பாக  உங்க வெள்ளைப் பற்களைப் பழுப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றிவிடும். பற்களோட பலத்தைக் குறைக்கும். சிகரெட் பிடிப்பதால் வாயில இருந்து துர்நாற்றம் வரும். இது வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்பையும் அதிகரிக்கும். 

55
smoking cigarettes with tea side effects

smoking cigarettes with tea side effects

டீ குடித்து விட்டு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது.?

உங்களுக்கு டீ குடித்துவிட்டு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை படிப்படியாக குறைத்து பின்னர் முழுதாக நிறுத்தலாம்.  டீ குடிப்பதற்கு பதிலாக வெந்நீர் அல்லது ஹெர்பல் டீ குடிக்கலாம்..  சிகரெட் பழக்கத்தை விட முடியவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved