கையில் உலக்கையுடன் நயன்தாரா; ரணகளத்துக்கு மத்தியில் வெளியான புது பட அப்டேட்!

By Ansgar R  |  First Published Nov 17, 2024, 9:52 PM IST

Nayanthara Next Movie : பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


பிரபல நடிகை நயன்தாரா தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சரத்குமாரின் "ஐயா" திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். இந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு பல தடைகளைக் கடந்து இன்று உச்ச நடிகையாக மாறி இருக்கிறார் அவர் என்றால் அது மிகையல்ல. 

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை நயன்தாரா தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அவருடைய நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இறுதியாக நயன்தாரா அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது தன்னுடைய புது திரைப்பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். 

Tap to resize

Latest Videos

undefined

நாளை காலை அந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாக உள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதக கூறப்படுகிறது. நயன்தாரா மற்றும் நடிகர் தனுஷ் இடையே பெரும் பிரச்சனைகள் நிலவிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் தன்னுடைய அடுத்த பட பணிகளை நயன்தாரா துவங்கி இருப்பது பெரும் ஆச்சர்யங்களை ஏற்படுத்தி வருகிறது. 

A war on the Beasts 🔥 Title Teaser tomorrow 10:15 AM🎥 pic.twitter.com/5d2LQF9z5Q

— Nayanthara✨ (@NayantharaU)

Netflix தலத்தில் வெளியாகவுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் கதையில் "நானும் ரவுடி தான்" திரைப்படத்திலிருந்து சில காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தனுஷ் அந்த காட்சிகளுக்கு சுமார் 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தனுஷுக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அறிக்கைகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

"திடீர் தளபதி இம்சை தாங்கலப்பா" ரஜினியின் மைண்ட் வாய்ஸ் இதுதானாம் - கொளுத்திப்போட்ட பிரபலம்!

click me!