Actress Kasthuri Arrested : தெலுங்கு மொழி பேசும் பெண்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பிரபல நடிகை கஸ்தூரியை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
அடிக்கடி தன்னுடைய சர்ச்சை பேசினால் சிக்கலில் சிக்கி வருபவர் தான் பிரபல தமிழ் திரையுலக நடிகை கஸ்தூரி. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுவெளியில் பேசிய அவர் தெலுங்கு பேசும் பெண்களை பற்றி ஆபாசமாக சர்ச்சை மிகுந்த வகையில் பேசி இருந்தார். இது தமிழக அளவில் அல்லாமல் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலுங்கு பேசும் பெண்கள் மட்டுமல்லாமல் தெலுங்கர்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரை கைது செய்ய கடந்த சில நாட்களாகவே தீவிர தேர்தல் வேட்டையும் நடத்தப்பட்டது. இந்த சூழலில் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்திய போது, அவர் அந்த வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டதாக மட்டும் தகவல்கள் கிடைத்தது. டெல்லி வரை அவரை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவருடைய உதவியுடன் நடிகை கஸ்தூரி அங்குள்ள வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
undefined
இதனை அடுத்து தெலுங்கானாவிற்கு சென்ற தமிழக போலீசார், அங்கு முகாமிட்டு அங்குள்ள உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உடைய உதவியோடு கஸ்தூரியை தேடி வந்தனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி தனிப்படை போலீசாரால் இன்று சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சென்னை எழும்பூரில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், கஸ்தூரியின் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், அதில் நான்கு பிரிவுகளில் அவர் ஜாமினில் வெளிவராத முடியாத வழக்குகளாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. பொதுவெளியில் ஒரு பிரபலம் பேசுவது என்பதும் அவருடைய பேச்சு சுதந்திரம் என்பதும் அடிப்படை உரிமை தான்.
ஆனால் அந்த பேச்சுரிமை என்பது வெறுப்புணர்வையோ, இரு சமூகத்திற்கு இடையிலான மோதலையோ ஏற்படுத்த கூடாது. தரைக்குறைவான அறிக்கைகள் வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின் படி வழக்கு தொடரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை உடனடியாக சென்னை கொண்டு வரும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கஸ்தூரியை கைது செய்ய இரண்டு தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.