கங்குவா எடிட்டரை தொடர்ந்து திடீரென உயிரிழந்த பிரபல படத்தொகுப்பாளர் - சோகத்தில் திரையுலகம்

By Ganesh A  |  First Published Nov 14, 2024, 12:20 PM IST

கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தொகுப்பாளர் மரணமடைந்துள்ளார்.


தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கங்குவா இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்திற்கு படத்தொகுப்பாளராக நிஷாத் யூசுப் பணியாற்றி இருந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள ஓட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நிஷாத் யூசுப் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

நிஷாத் யூசுப் மறைந்து சில தினங்களே ஆகும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தொகுப்பாளர் மரணமடைந்துள்ளார். அவர் பெயர் உதய சங்கர். இவர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான செம்பருத்தி படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பேமஸ் ஆனார். இதுதவிர மக்கள் ஆட்சி, குற்றப்பத்திரிக்கை, அரசியல், பொண்டாட்டி ராஜ்ஜியம் என தமிழ் சினிமாவில் 46 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் விடப்பட்ட கங்குவா! ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

இதில் செம்பருத்தி, மக்கள்ஆட்சி, குற்றபத்த்திரிக்கை, அரசியல், ராஜாலி, ராஜமுத்திரை, புருஷன் பொண்டாட்டி, பொண்டாட்டி ராஜ்ஜியம் மற்றும் மக்கள் ஆட்சி போன்ற படங்களுக்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார். 46 படங்களுக்கு மேல் எடிட்டராக பணியாற்றிய உதய சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு சேலம் அருகே உள்ள அவர் சொந்த ஊரில் அவரது உடஅடக்கம் செய்யப்பட உள்ளது

படத்தொகுப்பாளர்களின் மரணம் தமிழ் திரையுலகில் தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த வாரம் நிஷாத் யூசுப், இந்த வாரம் உதய சங்கர் மரணமடைந்ததை போல் இதற்கு முன்னதாக ஆடுகளம் படத்தின் எடிட்டர் கிஷோரும் கடந்த 2015-ம் ஆண்டு தன்னுடைய இளம் வயதிலேயே இறந்தார். இப்படி இளம் வயதில் படத்தொகுப்பாளர்கள் மரணம் அடைவதற்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தமே காரணம் என்றும் திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதையும் படியுங்கள்... கார்த்தி கேமியோ; ரோலெக்ஸ் என கங்குவா படத்தில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யங்கள் - ஒரு பார்வை

click me!